சிறுபான்மையினர் நல்லது செய்யும் வரை ஓயமாட்டேன்...!! கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் நிற்கும் அமித்ஷா...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 13, 2020, 11:58 AM IST
Highlights

குடியுரிமை திருத்த சட்டத்தில் இந்திய மக்களின் குடியுரிமையை  பறிக்க வகை செய்யும் சட்ட விதி இருப்பதை நிரூபிக்க தயாரா என ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜிக்கு சவால் விடுத்தார்.
 

பாகிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை  அளிக்கும் வரை மத்திய அரசு ஓயாது என மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா தெரிவித்துள்ளார் .  பாகிஸ்தான் ,ஆப்கனிஸ்தான் ,   பங்களாதேஷ் ,  ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள சிறுபான்மையின மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது இந்திய குடியுரிமை திருத்தச்  சட்டம் ,  இச்சட்டம் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை தனிமைப்படுத்தும் வகையில் உள்ளது எனக் கூறி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது .

குறிப்பாக ,  கேரளா ,  மேற்கு வங்கம் ,  உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் தங்கள் மாநிலத்தில் இச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் அதை எதிர்த்து வடகிழக்கு மாகாணம் தொடங்கி வட இந்தியா ,  தென்னிந்தியா முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது .  இந்நிலையில் இச்சட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜக தங்கள் கட்சித் தொண்டர்களை களமிறக்கியுள்ளது .  இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை  அமைச்சர் அமித்ஷா.  குடியுரிமை திருத்த சட்டத்தில் இந்திய மக்களின் குடியுரிமையை  பறிக்க வகை செய்யும் சட்ட விதி இருப்பதை நிரூபிக்க தயாரா என ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜிக்கு சவால் விடுத்தார். 

தொடர்ந்து பேசிய அவர் பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறி இருக்கும் இந்துக்கள் ,  கிறிஸ்தவர்கள் , சீக்கியர்கள் ,  புத்த மதத்தினருக்கு பிற இந்தியர்களைப் போல இங்கு குடியுரிமை வழங்கப்படும் அவர்களுக்கும் இந்தியாவில் சம உரிமை இருக்கிறது  எனவும் அமித்ஷா குறிப்பிட்டார் மேலும் அயோத்தியில் அடுத்த 4 மாதங்களில் ராமர் கோயில் கட்டப்படும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார் .  

click me!