மூச்சு விடத்தொடங்குமா தமிழகம்..? 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னை வந்தது. கைத்தட்டி வரவேற்ற அமைச்சர்கள்.

By Ezhilarasan BabuFirst Published May 14, 2021, 11:43 AM IST
Highlights

இதை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேற்கு வங்காளத்தில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தற்போதைக்கு வந்தடைந்துள்ளது இது இங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. 

மேற்கு வங்கம் தாராப்பூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னைக்கு வந்தடைந்தது. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் தமிழ்நாட்டுக்கு வரவேற்கிறோம் என தெரிவித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் , அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தமிழக சுகாதாரத்துறை செயலாளர், ராதாகிருஷ்ணன் மற்றும் முக்கிய சுகாதாரத்துறை நேரில் வந்து கைதட்டி வரவேற்றனர். ஆக்ஜிசன் ரயிலில் வந்திருப்பதால் அதை ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் நான்கு கண்டெய்னர் லாரிகள் வரவழைக்கப்பட்டு ஒரு லாரியில் 20 மெட்ரிக் டன் வீதம் நான்கு லாரிகளிலும் ஆக்சிஜன் ரயில் கண்டெய்னரிலிருந்து லாரிக்கு மாற்றும் நடைபெற்றது. 

இதை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேற்கு வங்காளத்தில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தற்போதைக்கு வந்தடைந்துள்ளது இது இங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. ஒரு இக்கட்டான காலகட்டத்தில் தான் தற்போது  தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து அதில் ஒரு பகுதியாக இது சாத்தியமாகியுள்ளது. இன்னும்  ஒரு 4 முதல் 5 நாட்கள் நாம் கடக்க வேண்டியிருக்கிறது. ஊரடங்கு தற்பொழுது அமலுக்கு வந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகிறது இன்னும் நான்கு ஐந்து  நாட்கள்  கடந்தால் ஊரடங்கின் பலன் என்ன என்று தெரியவரும். தமிழகத்தில் ஊரடங்கு இன்னும் கடுமையாக்கப்படும். அதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். 

இது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை இதனால் பெரிய பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் ஊரடங்கை முழுமையாக நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று வணிகர் சங்கங்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆக்சிசன் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்சிசனை குறைவாகப் பயன்படுத்தி அறிவியல் ரீதியாக மக்களை காப்பாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார் . 

 

click me!