அஜித் கொடுத்த கொரோனா நிதி இவ்வளவு தானா..? மேனேஜர் விளக்கம்..!

Published : May 14, 2021, 11:25 AM IST
அஜித் கொடுத்த கொரோனா நிதி இவ்வளவு தானா..? மேனேஜர் விளக்கம்..!

சுருக்கம்

ரூ.2.5 கோடி தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் கொடுத்ததாக செய்திகள் வெளியான நிலையில் அவர் ரூ.25 லட்சம் அளித்துள்ளார் என விளக்கமளித்துள்ளார் மேனேஜர் சுரேஷ் சந்திரா.

ரூ.2.5 கோடி தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் கொடுத்ததாக செய்திகள் வெளியான நிலையில் அவர் ரூ.25 லட்சம் அளித்துள்ளார் என விளக்கமளித்துள்ளார் மேனேஜர் சுரேஷ் சந்திரா.

நடிகர் அஜித் கொரோனா நிவாரண நிதியாக 2 கோடியே 50 லட்சம் கொடுத்ததாக தகவல் வெளியானது. இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டு எழுவதற்கும் இந்த பேரிடரை எதிர்கொள்வதற்கும், தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி ஆதாரங்களை செலவிட வேண்டிய தேவை உள்ளது. எனவே அரசின் முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளுக்கு ஏற்ப திரைப்பட நடிகர் அஜித் குமார் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பண பரிவர்த்தனை மூலம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் அஜித் 2 கோடி ரூபாய் நிவாரண நிதியாக தந்தது என்று வெளியான செய்தி தவறானது என அவரது பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அத்துடன் அஜித் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூபாய் 25 லட்சத்தை வழங்கியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!