திராவிட இயக்கங்கள் மட்டும்தான் தமிழ்நாட்டை ஆளும்.! பாஜகவுக்கு ‘ஷாக்’ கொடுத்த செங்கோட்டையன் !

Published : Apr 11, 2022, 02:29 PM IST
திராவிட இயக்கங்கள் மட்டும்தான் தமிழ்நாட்டை ஆளும்.! பாஜகவுக்கு ‘ஷாக்’ கொடுத்த செங்கோட்டையன் !

சுருக்கம்

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் பேச ஆரம்பித்தார். அப்போது கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் என்ன மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது பற்றி பட்டியலிட்டார்.

தமிழக சட்டப்பேரவை :

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியது. இன்று நகராட்சி பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பொன்முடி ஆகியோர் பதிலளித்தனர். 

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் :

பிறகு கேள்வி நேரத்தின்போது, அதிமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் பேச ஆரம்பித்தார். அப்போது கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் என்ன மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது பற்றி பட்டியலிட்டார்.

திராவிட இயக்கங்கள் ஆளும் :

தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும், வேறு எவராலும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்று தெரிவித்தார். இதற்கு பேரவையில் திமுக உறுப்பினர்களும் மேசையை தட்டி வரவேற்பு தெரிவித்தார்கள். செங்கோட்டையனின் கருத்து சட்டமன்றத்தில் முக்கியமான அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் மேலும், விரிசலடைந்து வரும் நிலையில், செங்கோட்டையனின் கருத்து மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : அன்று NEET.. இன்று CUET நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு.. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!