திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் மேயர் கொலை செய்யப்பட்டது போல, தமிழகத்தில் வடமாநிலத்தவர்களால் பல சம்பவங்கள் நடக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருகிங்னைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் மேயர் கொலை செய்யப்பட்டது போல, தமிழகத்தில் வடமாநிலத்தவர்களால் பல சம்பவங்கள் நடக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருகிங்னைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’தமிழகத்தில் ஒழுக்கத்தை வளர்க்கிற கல்வி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் மேயர் உட்பட 3 பேர் கொடூரமான கொலை செய்யப்பட்டதில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை சந்தேகம் அடைந்துள்ளது. வடமாநிலத்தவர்கள் ஏராளமானவர்கள் தமிழகத்தில் புகுந்துள்ளதால், இனி இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கும்’’ என்று சீமான் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று வேலூரில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய அவர், ’’இந்தி படித்தால் வேலை கிடைக்கும்னு சொல்றீங்க சரி, ஆனால் இந்தியை தாய்மொழியை கொண்ட மாநிலங்களில் நீங்கள் தன்னிறைவு அடைந்துவிட்டீர்களா? எனக்கு என்ன தோணுதுன்னா, இந்திக்காரன்கிட்ட அடிமையா இருக்கிற கருமத்துக்கு, இங்கிலீஷ்காரன்கிட்டயே அடிமையா இருந்துட்டு போயிடலாம். அவன் இன்னும் ரொம்ப டீசன்ட் ஃபெல்லோ. தாய்மொழி நுட்பமா பாரு..
அவன் துப்பாக்கி வெச்சிட்டு எல்லாரையும் என் மதத்தை பின்பற்றுன்னு சொல்லியிருந்தா, எல்லோரும் பின்பற்றியிருப்பான். முகலாயர் வரும்போது, எல்லாரும் முஸ்லீமா மாறுன்னு சொல்லியிருந்தா மாறியிருப்பான். ஆனால் அவன் மாத்தல. என் மொழியை கற்றே தீரவேண்டும் என்று கட்டாயப்படுத்தல. என் தாய்மொழியை கத்துக்கிட்டு உலகம் முழுக்க பரப்பினான்’’ என அவர் கடுமையாக விமர்சித்தார்.