ஜெயலலிதா பாணியில் அதிரடி அரசியல்... டெல்லியில் அதிமுக எம்.பி.,க்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த மோடி..!

By Thiraviaraj RMFirst Published Jul 24, 2019, 2:34 PM IST
Highlights

அண்ணா, ஜெயலலிதா பாணியில் மாநில அரசியலுக்கு திரும்பி மாபெரும் தலைவராக உருவெடுக்கப்போவதாக ராஜ்ய சபா எம்.பி.மைத்ரேயன் கூறியுள்ளார். 
 

அண்ணா, ஜெயலலிதா பாணியில் மாநில அரசியலுக்கு திரும்பி மாபெரும் தலைவராக உருவெடுக்கப்போவதாக ராஜ்ய சபா எம்.பி.மைத்ரேயன் கூறியுள்ளார்.

 

பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்தவர் மைத்ரேயன். மூன்று முறை ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், ராஜ்யசபா எம்.பியான மைத்ரேயன் நாடாளுமன்றத்தில் நடந்த பிரிவு உபச்சாரத்தில் பேசினார். அப்போது, ’மோடியுடன் 90 களில் இருந்து எங்கள் நட்பு தொடர்கிறது. பல ஆண்டுகளாக அவருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் இடையே விசுவாசமான தூதராக செயல்பட்டு வந்திருக்கிறேன். என் மீது தனிப்பட்ட அன்பை வைத்திருப்பதற்காக அவருக்கு நான் நன்றிபாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

 

திராவிட இயக்கத்தின் முன்னோடி பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது நாடாளுமன்ற பணிகளை இந்த அவையில் இருந்து தான்
தொடங்கினார். பின்னர் அவர் மாநில அரசியலுக்குச் சென்றார். எனது இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 1984 முதல் 1989
வரை இந்த அவையில் ஒரு உறுப்பினராக தனது பணிகளைத் தொடங்கினார். பின்னர் தமிழ்நாட்டு அரசியலில் நுழைந்து மாநிலத்தின்
மிகப் பிரபலமான தலைவராக உருவெடுத்தார். மாநிலங்களவையில் எனது மிக நீண்ட கால பணி அனுபவத்துக்குப் பிறகு மாநில
அரசியலுக்கு நான் திரும்பவேண்டிய காலகட்டம் இது.

நாடாளுமன்றத்தில் இது எனது அஸ்தமனக் காலம் என்பது உண்மை தான். ஆனால், மாநில அரசியலில் எனது சூரியோதயக் காலம்
என்று சொல்லவேண்டும். எனது குரல் இந்த அவையில் ஒலித்த பல நினைவுகூரத்தக்க நிகழ்வுகள் உள்ளன. எனது பெயர் மறைந்து போகலாம். எனது முகம் மாறக்கூடும், என்னை நீங்கள் நினைவுகொண்டால் எனது குரல் மட்டுமே அடையாளமாக இருக்கும்’ என அவர் கூறினார்.
 

click me!