தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட சட்ட மோசாதாக்களை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டப்பேரவையின் ஒப்புதலை பெறும் வகையில் வருகிற 18 ஆம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது
தமிழக அரசு ஆளுநர் மோதல்
தமிழக ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி நீண்ட காலமாக ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கில்லையென்றும் இதன் காரணமாக அரசு பணிகளை துரிதப்படுத்த முடியவில்லையெனவும் கூறப்பட்டது. இதனையடுத்து ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றமு கடுமையாக கருத்துகளை தெரிவித்து இருந்தது.
undefined
10 சட்ட மசோதாக்கள் என்ன.?
இந்தநிலையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்ற 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிவைத்துள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான சட்ட மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன அந்த வகையில், 1 சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, 2 தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா3.தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, 4. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா,
5. தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, 6 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா
7.தமிழ் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, 8 தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, 9. அண்ணா பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா 10. தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா ஆகியவற்றை ஆளுநர் ரவி திரும்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் இந்த சட்ட மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப இருப்பதாக கூறப்படுகிறது.
சிறப்பு சட்டமன்ற கூட்டம்
இதனையடுத்து ஆளுநரின் நடவடிக்கை எதிராக தமிழக அரசு சார்பாக சிறப்பு சட்டமன்ற கூட்டமானது கூட்டப்பட்டுள்ளது. அதன் படி நவம்பர் 18 ஆம் தேதி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இந்த சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.