என்னது இபிஎஸ்-க்கு நான் தூது அனுப்பினேனா.. அதெல்லாம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.. எகிறும் ஓபிஎஸ்..!

Published : Nov 16, 2023, 06:37 AM ISTUpdated : Nov 16, 2023, 06:45 AM IST
என்னது இபிஎஸ்-க்கு நான் தூது அனுப்பினேனா.. அதெல்லாம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.. எகிறும் ஓபிஎஸ்..!

சுருக்கம்

ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தால் மட்டும்தான் தேர்தல் வெற்றி சாத்தியம். இல்லையென்றால், அதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும் அவர்களால் ஜெயிக்க முடியாது.

பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் அதிமுகவால் தமிழகத்தில் நிச்சயமாக வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

ஒற்றை தலைமை விவகாரத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவை முழுமையாக கைப்பற்றியதை அடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைவதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு தூது அனுப்புவதாகவும் தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this linkhttps://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில், ஈரோட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- எடப்பாடி பழனிசாமிக்கு தூது அனுப்பியதாக கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். அவருக்கு தூது அனுப்ப எனக்கு அவசியம் இல்லை. பாஜக இன்றி அதிமுகவால் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தால் மட்டும்தான் தேர்தல் வெற்றி சாத்தியம். இல்லையென்றால், அதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும் அவர்களால் ஜெயிக்க முடியாது என்றார். 

இதையும் படிங்க;- மூன்றாவது முறையாக விசாரணைக்கு வராத வழக்கு..! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்- நடந்தது என்ன.?

மேலும், கட்சி ஒன்று பட்டால் தான் வெற்றி பெற முடியும் என்று தெரிவித்துள்ளேன் அதற்காக பாடுபடுவேன். நானும் டிடிவி.தினகரனும் இணைந்து செயல்படுகிறோம். சசிகலா எங்களுடன் வருவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு ஜோதிடம் தெரியாது நீதிபதிகள் தான் தீர்ப்பு வழங்குவார்கள். நல்ல முடிவு எட்டப்படும் பொறுத்து இருந்து பாருங்கள் என ஓபிஎஸ் கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!