"MGR விழாவில் இரட்டையர்கள் செம்ம பிசி..." ஆட்சியை கைப்பற்ற தமிழ் கற்கும் ஆளுநர்!?

First Published Nov 15, 2017, 4:32 PM IST
Highlights
Tamil Nadu Governor Banwarilal Purohit learn for take over tamilnadu rule


பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக பதவி ஏற்றுக் கொண்டதும் ஆர்வத்துடன் தமிழ் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார். இதற்கு தமிழ் மொழி மீது உள்ள ஆர்வம்தான் என ஆளுநர் மாளிகை அடித்துச் சொன்னாலும், இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்துவதில் மட்டுமே பிஸியாக இருப்பதால், அவர்களை ஓரம்கட்டிவிட்டு முழு அதிகாரத்தையும் தன் கைக்கு கொண்டுவர முயற்சி  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவே தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

நவம்பர் 14. நேரு பிறந்த நாளான நேற்று சென்னையில் நேரு சிலைக்கு  துணை முதலமைச்சர் ஓபிஎஸ்  உள்ளிட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தார் ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தங்களுக்குப்  ஒரு பெரிய அதிர்ச்சியை  தரப் போகிறார் என்று அப்போது யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை. சென்னையிலிருந்து நேற்று காலை விமானத்தில் கோவை புறப்பட்டு, சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாரதியார் பல்கலைக் கழக  பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து  ,கோவை கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், புறநகர் எஸ்.பி. மூர்த்தி மற்றும் வருவாய்துறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோரை அவசரமாக அழைத்த கவர்னர் தரப்பினர் கோப்புகளை எல்லாம் எடுத்திட்டு உடனே சுற்றுலா மாளிகைக்கு வாங்க என அழைத்தனர்.

இந்த திடீர் அழைப்பால் அசந்து போன அதிகாரிகள் அலறியடித்துக் கொண்டு கோப்புகளுடன் கோவை சுற்றுலா மாளிகைக்கு சென்றனர். தொடர்ந்து கோப்புகளை வாங்கி புரட்டிப்பார்த்த கவர்னர் , அதிகாரிகளிடம் கேட்ட சரமாரி கேள்விகளால் திணறித்தான் போனார்கள்.

அப்போதுதான் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பியிருந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கோவையில் தன் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். திடீரென ஆளுநர் நடத்தும் ஆய்வுக் கூட்டம் பற்றி அவருக்குத் தகவல் தெரியவர குழம்பிவிட்டார்.

இதற்கிடையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கு.ராமகிருஷ்ணன் தலைமை ஏராளமானோர் திரண்டு , ஆளுநர் மூலமாக தமிழக அரசி்ன் சுயாட்சி பறிக்கப்படுவதைக் கண்டிக்கிறோம் என்றும், இந்த கையாலாகாத தமிழக அரசையும் கண்டிக்கிறோம் எனவும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொதுவாக ஆளுநர் ஒரு மாவட்டத்துக்கு வருகிறார் என்றால் அம்மாவட்ட கலெக்டரும், எஸ்.பியும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசுவார்கள். ஆனால், இந்தக் கூட்டமோ முதல்வர் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டம் போல திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது என்கிறார் ஒரு அதிகாரி..

குறிப்பாக, கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகள், குற்ற வழக்குகளில் இன்னும் மீட்கப்பட வேண்டிய பொருட்கள், தலைமறைவு குற்றவாளிகளின் எண்ணிக்கை, பிடிவாரன்ட் நிலுவை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆளுநர் விசாரித்தார் என்றும்... ரேஷன் அரிசிக் கடத்தலில் பிடிபட்டுள்ள குற்றவாளிகள் எத்தனை பேர், குண்டர் சட்டத்தில் கைதான நபர்கள் எத்தனை பேர், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி எவ்வளவு போன்ற தகவல்களைப் பெற்றார் என்றும் தெரியவருகிறது.

அதாவது தமிழகத்தில் ஒரு முதலமைச்சர்  இருக்கும்போதே  அவரது துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்திருக்கிறார் ஆளுநர். இது குறித்து தகவல் அறிந்து வேகமாக வந்த அமைச்சர் வேலுமணி கூட ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. ஏனெனில் இது முழுக்க முழுக்க அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம்.

ஆனால், தமிழக அரசின் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி.“ஆளுநர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தால் மாநிலச் சுயாட்சிக்குப் பாதிப்பு என்பது சரியல்ல. முதல்வர், துணை முதல்வர் நன்றாக செயல்படுகிறார்கள். ஆளுநரும் செயல்படுகிறார். இது ஆரோக்கியமான விஷயம்தான் என்றார். ஆளுநரின் ஆலோசனை குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக அங்கு அமைச்சரை அங்கு போகச் சொன்னதால்தான் வேலுமணியே வந்திருக்கிறார்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் மாலை சர்க்யூட் ஹவுஸில் அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பாஜக பிரமுகர் வானதி சீனிவாசன், சிறுதுளி வனிதா மோகன் உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்துப் பேசினர். பின் ஆளுநர் அருகே இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திவிட்டு சர்க்யூட் ஹவுஸுக்கே திரும்பினார்.

நேற்றிரவு அங்கேயே தங்கிய ஆளுநர் இன்று மேலும் சில ஆய்வுகளையும் கோவையில் நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் திறந்து வைத்த 1.7 கிலோமீட்டர் தூரம் கொண்ட மேம்பாலத்தையும், அருகே கட்டப்பட்டு வரும் இன்னொரு மேம்பாலத்தையும் ஆளுநர் ஆய்வு செய்கிறார் என்று சுற்றுலா மாளிகையில் இருந்து அதிகாரிகள் நேற்றே தெரிவித்தனர். மேலும் இன்று தூய்மை இந்தியா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார் ஆளுநர்.

தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநரே இருக்கிறார்... ரெகுலர் ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று பல கட்சிகள் குரல் எழுப்பின. அதன் அடிப்படையில் வித்யாசாகர் ராவுக்குப் பதிலாக புரோகித் நியமிக்கப்பட்டார். முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்ட புரோகித், மாநில அரசின் அதிகாரத்தில் மூக்கை நுழைக்கிறாரா என்ற விவாதங்கள் இந்த ஆய்வுகள் மூலம் நடந்துகொண்டிருக்கின்றன. பெரும்பாலும் அனைத்துக்  கட்சிகளும் கவர்னரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சீக்கிரமே முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், ஆட்சி , அதிகாரம் என்று ஆளுநரின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுமோ என்பதுதான் இப்போதைய நிலையாக இருக்கிறது. இதைத் தானே எதிர்பார்த்து காய்களை  நகர்த்தி வருகிறது பாஜக!

click me!