மாணவர்களுக்கு இது ஆபத்தாய் வந்து அமையும்.. திமுக அரசை எச்சரிக்கும் வைகைச்செல்வன்..!

By vinoth kumarFirst Published Aug 23, 2021, 12:40 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. கொரோனா 3வது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என கண்டறியப்படும் வேளையில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் தமிழக அரசு பள்ளிகள் திறப்பதற்கு ஆணையிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு  மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை மாவட்ட அதிமுக இலக்கிய அணி சார்பாக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகைச்செல்வன்;- உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. கொரோனா 3வது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என கண்டறியப்படும் வேளையில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் தமிழக அரசு பள்ளிகள் திறப்பதற்கு ஆணையிட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.


 
50% மாணவர்களோடு பள்ளிகள் செயல்படும் என தெரிவித்து இருந்தாலும் கொரோனா இல்லாத மாணவர்களை கண்டறிவது, பரிசோதனை ஆசிரியர்களுக்கு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்களுக்கு இது ஆபத்தாய் வந்து அமையும். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடவடிக்கைக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

click me!