உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் தமிழக அரசு.. அவசர ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Published : Jul 27, 2021, 10:51 AM IST
உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் தமிழக அரசு.. அவசர ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக  தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அவசர ஆலோசனை நடைபெற உள்ளது. இதில், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் கலந்துகொள்கின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று கொண்டிருந்தாலும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. இதன் காரணமாக தனி அலுவலர்களின் பதவி காலம் முடிவடையும் சூழல் ஏற்படும் போது 6 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. 

அப்போது, வாக்காளர் பட்டியலை விரைவாக சரிசெய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. இதேபோல, மாநகராட்சி, நகராட்சி மற்றும் விடுபட்ட சில பேரூராட்சிகளில் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சில இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் சீர் திருத்தம், மகளிருக்கு இடஒதுக்கீடு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவற்றை கலைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.  

PREV
click me!

Recommended Stories

பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!
பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!