9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு..? அன்பில் மகேஷ் முக்கியத் தகவல்..!

Published : Jul 27, 2021, 10:15 AM ISTUpdated : Jul 27, 2021, 10:16 AM IST
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு..? அன்பில் மகேஷ் முக்கியத் தகவல்..!

சுருக்கம்

தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.  


தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி பள்ளிகளில் அடர்வனம் அமைக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ். பின்னர் பள்ளி திறப்பு குறித்து பேசிய அவர், ‘’தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. பிற மாநிலங்களில் உள்ள நிலவரம் பற்றி முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின் உரிய முடிவு எடுக்கப்படும். 

கொரோனா கட்டுக்குள் வந்த பின், தேர்வு நடத்துவதற்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும். ஆசிரியர் தேர்வு வாரியத்தை, TNPSC உடன் இணைக்கும் திட்டம் இல்லை’’ என அவர் தெரிவித்தார்.  தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிபடியாக குறைந்து வருகிறது. பல இடங்களில் இயல்புநிலை திரும்பி விட்டது. இதனால் பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறது 
 

PREV
click me!

Recommended Stories

பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!
பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!