மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 நிவாரணம் - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

By Ajmal KhanFirst Published Nov 23, 2022, 11:10 AM IST
Highlights

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சீர்காழியில் கொட்டி தீர்த்த மழை

வட கிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தீவிரமாக பெய்து வந்தது. இத்ன காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு மழை நீர் வெளியேற்றப்பட்டது. இதனிடையே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் மழையானது  கொட்டி தீர்த்துள்ளது.  கடந்த 1900ஆம் ஆண்டுக்கு பிறகு சீழ்காழியில்  மிக, மிக கன மழையானது பெய்தது. சீர்காழியில் 24 மணி நேரத்தில் மட்டும்  44 செ.மீ., பெரும்பகுதி -34.8 செ.மீ மழையும் பெய்தது. இதன் காரணமாக திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சீர்காழி பகுதி குட்டி தீவு போல உருவாகியது.  குறிப்பாக சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருமுல்லைவாசல், சூரைக்காடு, கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மிக அதிக கனமழை பெய்தது. 

சபரீசனை சந்தித்து பேசினாரா காயத்ரி ரகுராம்..? அமர் பிரசாத் ரெட்டி போட்ட பதிவால் பரபரப்பு

நேரில் பார்வையிட்ட முதலமைச்சர்

இந்த கன மழையால் சுமார் 40,000 ஹெக்டேர் நெல் (சம்பா மற்றும் தாளடி) பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து அந்த பகுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்து உதவிகளை வழங்கினார். அப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். 

15 நாட்களுக்கு முன்பே புகார்.? அறிவுரை வழங்கிய அண்ணாமலை.! ஆடியோ வெளியானதால் சூர்யா சிவா மீது நடவடிக்கையா ?

ரூ.1000- அரசாணை வெளியீடு

இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.1000 வழங்க ரூ 16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்க 16 கோடியே 16 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை முதல் நிவாரணத்தொகை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

பெண்களை தவறாக பேசினால் கையே வெட்டுவேன்னு சொன்னீங்க! என்னாச்சு! நேரம் பார்த்து அண்ணாமலையை வச்சு செய்யும் திமுக
 

click me!