பெண்களை தவறாக பேசினால் கையே வெட்டுவேன்னு சொன்னீங்க! என்னாச்சு! நேரம் பார்த்து அண்ணாமலையை வச்சு செய்யும் திமுக

Published : Nov 23, 2022, 11:04 AM ISTUpdated : Nov 23, 2022, 11:10 AM IST
பெண்களை தவறாக பேசினால் கையே வெட்டுவேன்னு சொன்னீங்க! என்னாச்சு! நேரம் பார்த்து அண்ணாமலையை வச்சு செய்யும் திமுக

சுருக்கம்

 பாஜக-வில் பெண்களின் பாதுகாப்பும், ஜனநாயகமும் பல் இழித்து, சந்தி சிரிக்குது. பெண் உறுப்பை வெட்டி வீசுவேன்,கொலை செய்வேன் என மிரட்டிய குற்றவாளிக்கு சூரியாவுக்கு விசாரனை கமிட்டி…!! அதனை தட்டி கேட்ட பெண் காயத்திரி கட்சியை விட்டு நீக்கம்.

பாஜகவில் பெண்களின் பாதுகாப்பும், ஜனநாயகமும் பல் இழித்து, சந்தி சிரிக்குது. பெண் உறுப்பை வெட்டி வீசுவேன், கொலை செய்வேன் என மிரட்டிய குற்றவாளிக்கு சூர்யாவுக்கு விசாரனை கமிட்டி. அதனை தட்டி கேட்ட பெண் காயத்திரி கட்சியை விட்டு நீக்கம் என திமுக தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி கடுமையான விமர்சனம் செய்துள்ளார். 

பிரபல மருத்துவரான டெய்சி சரண் யூடியூப் சேனல்களில் மருத்துவ குறிப்புகளை வழங்குவதில் பிரபலமானவர். கடந்த ஆண்டு பாஜகவின் இணைந்த அவருக்கு சிறுபான்மையினர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதேபோல், திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா திமுக மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த அவருக்கு ஓபிசி அணியில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- சபரீசனை சந்தித்து பேசினாரா காயத்ரி ரகுராம்..? அமர் பிரசாத் ரெட்டி போட்ட பதிவால் பரபரப்பு 

இந்நிலையில், பாஜக சிறுபான்மையினர் அணியில் மற்றவர்களுக்கு பதவி வழங்குவதில் இரண்டு பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டெய்சி சரண் ஆடியோ மெசேஜ் ஒன்றை சூர்யா சிவாவிற்கு அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து டெய்சி சரணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சூர்யா சிவா வாய் கூசும் அளவிற்கு தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அவர் 6 மாதம் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்தார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி பல்வேறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பெண்களை தவறாக பேசினால் கையே வெட்டுவேன் என்பது தானே உங்கள் கொள்கை முழக்கம்!

பெண்களை தவறாக பேசிய திருச்சி சூர்யா என்கிற குற்றவாளியின் கையை வெட்ட வேண்டாம் கட்சியில் இருந்தாவது நீக்குவீங்களா அண்ணாமலை  அவர்களே? பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக குஷ்பு அவர்கள் குரல் கொடுப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க;-  பாஜக பெண் தலைவருக்கு கொலை மிரட்டல்..! கட்சி நிகழ்ச்சியில் சூர்யா சிவா பங்கேற்க தடை..! உத்தரவிட்ட அண்ணாமலை

மற்றொரு பதிவில் பாஜக-வில் பெண்களின் பாதுகாப்பும், ஜனநாயகமும் பல் இழித்து, சந்தி சிரிக்குது. பெண் உறுப்பை வெட்டி வீசுவேன்,கொலை செய்வேன் என மிரட்டிய குற்றவாளிக்கு சூரியாவுக்கு விசாரனை கமிட்டி…!! அதனை தட்டி கேட்ட பெண் காயத்திரி கட்சியை விட்டு நீக்கம்!! என ராஜீவ் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;-   பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது மீண்டும் நிரூபணம்.. காயத்ரிக்கு ஆதரவாக ஜோதிமணி..!

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதுரையின் விஸ்வரூபம்..!சர்வதேச அந்தஸ்து வழங்கிய மத்திய அரசு - இபிஎஸ் வரவேற்பு..!
அமைச்சர் பதவி கிடைக்காது..! பி.டி.ஆரைத் தோற்கடிக்க ஸ்கெட்ச் போடும் தளபதி... திமுகவின் உள்ளடி அரசியல்..!