15 நாட்களுக்கு முன்பே புகார்.? அறிவுரை வழங்கிய அண்ணாமலை.! ஆடியோ வெளியானதால் சூர்யா சிவா மீது நடவடிக்கையா ?

By Ajmal KhanFirst Published Nov 23, 2022, 10:34 AM IST
Highlights

பாஜக நிர்வாகி சூர்யா சிவா மீது 15 நாட்களுக்கு முன்பே புகார் அளிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பாஜக பெண் தலைவர் டெய்சி சரண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இரு தரப்புக்கும் அண்ணாமலை அறிவுரை வழங்கியதாக டெய்சி சரண் தெரிவித்துள்ளார்.

பெண் தலைவருக்கு கொலை மிரட்டல்

பாஜகவின்  சிறுபான்மையினர் அணி தலைவராக இருக்கும் டெய்சி சரணுக்கும், ஓபிசி அணியில் இருக்கும் சூர்யா சிவாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.  தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த ஆடியோவில் திருச்சி சிவா மற்றும் டெய்சி சரண் என இருவரும் மாறி, மாறி சண்டை போட்டுக்கொள்கின்றனர். மிகவும் மோசமான ஆபாச வார்த்தைகளால் டெய்சி சரணை சூர்யா திட்டியுள்ளார். மேலும் பாஜகவில் நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டு பதவி வாங்கினீர்கள் என தெரியும் என மோசமாக பாஜக மூத்த நிர்வாகி பெயரை குறிப்பிட்டு ஆபாசமாக பேசியுள்ளார். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்து இருந்தார்.

நேரம் கேட்ட எடப்பாடி பழனிசாமி..! உடனே ஓகே சொன்ன ஆளுநர்..! திமுக அரசுக்கு எதிராக களம் இறங்கும் அதிமுக

சூர்யா சிவாவிற்கு தடை

இதனையடுத்து இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான திரு கனக சபாபதி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்து இருந்தார். மேலும், ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை OBC அணியின் மாநில பொது செயலாளர் திரு சூர்யா சிவா அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க வேண்டாம் என்று தடையும் விதித்திருந்தார். இந்தநிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக பாஜகவின்  சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் கூறுகையில், சூர்யா சிவா பேசிய தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலிடம் புகார் அளித்தேன். இது தொடர்பாக அண்ணாமலை இரு  தரப்பையும் கூப்பிட்டு விசாரித்தார். நடவடிக்கை எடுப்பதாக அண்ணாமலை கூறியிருந்தார். என்னையும் சூர்யாவையும் கூப்பிட்டு அறிவுரை வழங்கினார். 

அதிமுக செய்த வஞ்சகத்தையே தொடரும் திமுக.! கணினி ஊழியர்களுக்கு செய்யும் பச்சை துரோகம் - இறங்கி அடிக்கும் சீமான்

15 தினங்களுக்கு முன்பே புகார்

இந்த சம்பவம் நடைபெற்று 15 தினங்கள் ஆகிவிட்டது.ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என தெரியவில்லை. திமுகவில் இருந்து வந்தவர் என்பதற்கான நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்களோ எனக்கு தெரியவில்லை. மாநில பொறுப்பு வகிக்கும் தலைவிக்கே இந்த பிரச்சனை என்றால் கட்சியின் வருகின்ற மத்த பெண் நிர்வாகிக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் என கூறியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ஆடியோ விவகாரம் நேற்று காலை தான் தனக்கு தெரிந்தது போல் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் 15 தினங்களுக்கு முன்பே இந்த பிரச்சனை அண்ணாமலைக்கு தெரியவந்துள்ளதாகவும், ஆனால் இதனை அண்ணாமலை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.  

இதையும் படியுங்கள்

சபரீசனை சந்தித்து பேசினாரா காயத்ரி ரகுராம்..? அமர் பிரசாத் ரெட்டி போட்ட பதிவால் பரபரப்பு

click me!