சபரீசனை சந்தித்து பேசினாரா காயத்ரி ரகுராம்..? அமர் பிரசாத் ரெட்டி போட்ட பதிவால் பரபரப்பு

By Ajmal KhanFirst Published Nov 23, 2022, 9:46 AM IST
Highlights

திமுகவில் முக்கிய பங்கு வகிக்கும் சபரீசனை தனியார் நட்சத்திர விடுதியில் காயத்ரி ரகுராம் சந்தித்து சுமார் 1 மணி நேரம் பேசியதாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி போட்ட பதிவிற்கு காயத்ரி ரகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்

தமிழக பாஜகவில்  வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், இவர் காசி தமிழ் சங்கம் நிகழ்விற்கு தன்னை அழைக்கவில்லையென்றும், பாஜகவினர் தன்னை தனிப்பட்ட முறையில் தாக்குவதாகவும் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் நேற்று திடீரென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில்,  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் திருமதி. காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். 

நேரம் கேட்ட எடப்பாடி பழனிசாமி..! உடனே ஓகே சொன்ன ஆளுநர்..! திமுக அரசுக்கு எதிராக களம் இறங்கும் அதிமுக

சபரீசனை சந்தித்தாரா காயத்ரி

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காய்த்ரி ரகுராம் பெயரை குறிப்பிடாமல், சபரீசனை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து பேசியதாக குறிப்பிட்டுள்ளார். சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். எனவே பாஜகவில் துரோகிகளுக்கு இடமில்லையென தெரிவித்தவர், சரியான நேரத்தில் சரியான முடிவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிமுக செய்த வஞ்சகத்தையே தொடரும் திமுக.! கணினி ஊழியர்களுக்கு செய்யும் பச்சை துரோகம் - இறங்கி அடிக்கும் சீமான்

பதிலடி கொடுத்த காயத்ரி

இந்த பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த பதிவை டேக் செய்து காய்த்ரி ரகுராம் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், இது முட்டாள் தனமான கருத்து, தனது தோழியின் பிறந்தநாளுக்கு சென்றிருந்தேன். அப்போது என்னை அழைத்தது போல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களையும் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவரையும் அழைத்துள்ளனர். இது ஒரு எதிர்பாராத சந்திப்பு. வணக்கம் சொல்லும் போது திருப்பி வணக்கம் சொன்னதாக கூறியுள்ளார். முகத்தை திருப்பி கொண்டு நடக்க நான் ஒன்றும் சிறு பிள்ளை இல்லையென கூறியுள்ளார். இதனிடையே தான் பதிவிட்ட டுவிட்டர் பதிவை காய்த்ரி ரகுராம் நீக்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் அதிரடி நீக்கம்.. அண்ணாமலை அறிவிப்பு..!

click me!