புதிய கல்விக் கொள்கையில் இருந்து பிட் அடிக்கப்பட்ட திட்டம் தான் காலை சிற்றுண்டி திட்டம் - தமிழிசை விமர்சனம்

By Velmurugan s  |  First Published Aug 26, 2023, 4:08 PM IST

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றிருந்த உணவு திட்டத்தை பிட் அடித்து தான் தமிழக அரசு காலை சிற்றுண்டி என்று நடைமுறைபடுத்தி உள்ளதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்  செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் நொய்யல் பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளேன். நொய்யல் ஆறு சீர்கேடு நிறைந்திருப்பதாக அறிந்து கொண்டேன். தமிழகத்தில் உள்ள ஆறுகளை கழிவுகள் கலக்காமல் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். 

அயல்நாட்டில் இருந்து வருகை தந்த உடனே பெங்களூர் சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டிப் பேசி உள்ளார் பிரதமர். இது போன்ற ஊக்கம்தான் சந்திரயான் வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு சந்திரயான் தென் துருவத்திற்கு சென்ற முதல் நாடு என்ற பெயரைப் பெற்று இருக்கிறது. ஆளுநர் என்றாலே தமிழகத்தில் துச்சமாக பார்க்கும் மனநிலை அதிகரித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு? மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்

டிவி விவாதத்தில் வரக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் தரை குறைவாக ஆளுநரை பேசுகிறார்கள். வேண்டுமென்றே அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநரை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற சண்டைகளை முதல்வர் தான் முடித்து வைக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி ஆளுநர் உடன் முதல்வர் பேச வேண்டும். அதை விடுத்து விட்டு முரசொலியில் பேசுவது சரியானதாக இல்லை. 

167 வது பிரிவை தமிழக அரசு பயன்படுத்தி ஆளுநரிடம் பேசலாம். ஆனால் பேசுவதில்லை. நீட் தேர்வினால் அதிகளவில் மருத்துவர்கள் உருவாகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் வேண்டுமென்று இவ்வாறு பேசி அரசியல் செய்கிறார்கள். கார்த்திக் சிதம்பரம் கூட நீட்டுக்கு ஆதரவாக தான் இருக்கிறார். ஏனென்றால் அவருடைய அம்மா தான் நீதிமன்றத்தில் நீட்டுக்காக போராடிய அதனை பெற்றுக் கொடுத்தார். நீட் தேர்வு குறித்து இன்னும் பேசி வருவது மாணவருக்கு செய்யும் துரோகம். 

புதிய கல்விக் கொள்கையில் பாடத்துடன் உணவு என்ற கருத்து உள்ளது. அதனை பிட் அடித்து காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் இருந்து பிட் அடித்து மாநிலக் கல்விக் கொள்கையில் சேர்த்து வருகிறது தமிழக அரசு. கச்சத்தீவில் இருந்து கல்வி வரை எல்லாம் தாரை வார்த்துவிட்டு இப்போது கொண்டு வருகிறோம் என்று பேசி வருகிறார்கள். முரசொலியில் யோகி ஆதிநாத் குறித்து விமர்சனம் வந்திருக்கிறது. முதலில் தமிழ்நாடு நன்றாக உள்ளதா என பார்க்க வேண்டும். 

திமுகவின் தங்க தமிழ்செல்வனை வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்

மாணவர்கள் மத்தியில் ஜாதி கலவரம், வேங்கை வயல் விவகாரம், உள்ளிட்டவை இன்றும் இருந்து வருகிறது. இந்த விமர்சனம் எதற்காக வருகிறது? ரஜினிகாந்த் அவர் காலில் விழுந்ததால் அடுத்த பிரதமர் அவர் என நினைத்து இவ்வாறு செய்து வருகிறார்கள். ஆனால் அடுத்த பிரதமர் மோடி தான், பிரகாஷ்ராஜ் குறித்தெல்லாம் பேச கூடாது. ஆளுநர்கள் வரவேற்பு என்பது ஒரு பாசிட்டிவ் அப்ரோச். கருப்புக் கொடி என்பது நெகட்டிவ் அப்ரோச். ஆனால் பாசிட்டிவ் அப்ரோச்சுக்கு தமிழ்நாட்டில் அனுமதி இல்லை. நெகடிவ் அப்பரோச்சிக்கு அனுமதி இருக்கிறது. ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை. நீங்கள் கொடுக்கும் மசோதாவை எல்லாம் உடனடியாக ஸ்டாம்ப் குத்தி வெளியே அனுப்புவதற்கு. ஒரு ஆளுநர் அந்த மசோதாவை கையில் வைத்திருக்கிறார் என்றால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அதையெல்லாம் கூற முடியாது என தெரிவித்தார்.

click me!