தமிழகத்தில் மத்திய புலனாய்வுத் துறைக்கு விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதி நடைமுறையை அரசு அதிரடியாக திரும்பப் பெற்று அத்தகவல்களை அரசிதழிலில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
எதிர்கட்சிகளுக்கு நெருக்கடி
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க தடுக்க பாஜக திட்டமிட்டு, மத்திய அரசின் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றின் மூலம் சோதனை நடத்தி நெருக்கடி கொடுப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தெரிவித்து வந்தது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதனை தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் அமலாக்கத்துறை கைது செய்யப்பார். தற்போது தமிழகத்தில் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கவே செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள் விமர்சித்து வருகிறது.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதில் சிக்கல்.. என்ன காரணம் தெரியுமா?
சிபிஐ விசாரணைக்கு தடை
இந்தநிலையில் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு செக் வைக்கும் வகையில், தமிழ்நாட்டில் இனி மாநில அரசின் அனுமதிக்குப் பிறகே, மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.,) விசாரணை மேற்கொள்ள முடியும். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்டது. இதுபோன்ற உத்தரவை ஏற்கெனவே மேற்கு வங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலங்கானா போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன. இந்த நிலையில் இந்த அறிவிப்பை அரசிதழில் வெளியிட்ட தமிழக அரசு ,சிபிஐ எந்தவொரு மாநிலத்திலும் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும். இதற்கு தில்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 6-இல் வகை செய்யப்பட்டுள்ளது.
அரசிதழில் வெளியிட்ட தமிழக அரசு
சிறப்புக் காவல் அமைப்புச் சட்டத்தின் கீழ், சில வழக்குகளுக்காக வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதி நடைமுறையை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதைத் தொடா்ந்து, தமிழ்நாட்டில் மத்திய புலனாய்வுத் துறை, இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, மாநில அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டும். அதன்பிறகே, விசாரணையை மேற்கொள்ள முடியும் என்று அந்த அரசிதழில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்