தீபாவளிக்கு தமிழக அரசு செய்த அதிரடி..!! 8 லட்சம் பேருக்கு பேருந்துகள் ரெடி..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 24, 2019, 1:09 PM IST
Highlights

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 24, 25, 26 ஆகிய தேதிகளில்  கோயம்பேட்டில் இருந்து பெருங்களத்தூர் வழியாக செல்லும் பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக சென்று  வண்டலூர் சென்றடையும் கோயம்பேட்டில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக ,தமிழக அரசின் சார்பில்  இன்று முதல்  சென்னை கோயம்பேடு, டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது, அதற்கான சிறப்பு முன்பதிவு மையங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 8லட்சம் பயணிகள் வெளியூர் செல்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  ஆறு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 24, 25, 26 ஆகிய தேதிகளில்  கோயம்பேட்டில் இருந்து பெருங்களத்தூர் வழியாக செல்லும் பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக சென்று  வண்டலூர் சென்றடையும். 

கோயம்பேட்டில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்வதற்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அது குறித்து புகார் தெரிவிக்க டோல் ப்ரி எண் - 1800 4256 151 போக்குவரத்து கழகங்கள் தொடர்பாக குறைபாடு இருந்தால்  9445014436 எண்ணில் புகார் அளிக்கலாம் என்றார். ஆம்னி பேருந்துகளில் அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்தால் பேருந்து சிறைபிடிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த அவர், அதிக கட்டணம் குறித்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்றார்.
 

click me!