இனி யாரும் தப்ப முடியாது..திட்டமிட்டு சாதி- மத மோதல்..கூண்டோடு தூக்க ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..

By Thanalakshmi VFirst Published Mar 12, 2022, 4:05 PM IST
Highlights

சமூக வலைதளங்கள் மூலம் சாதி,மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் சமூக மோதல்களை தடுக்க அனைத்து அமைப்புகளுடன் சேர்ந்து காவல்துறையினர் பணியாற்றிட வேண்டு என்று அவர் கேட்டுக்கொண்டார்.
 

சமூக வலைதளங்கள் மூலம் சாதி,மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் சமூக மோதல்களை தடுக்க அனைத்து அமைப்புகளுடன் சேர்ந்து காவல்துறையினர் பணியாற்றிட வேண்டு என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சென்னையில் மூன்றாவது நாளாக மாவட்ட ஆட்சியர், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு சிறப்பு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சமூக வலைதளங்கள் மூலம் சாதி- மத மோதல்களை சட்ட- ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் காவல்துறையினர் பார்க்காமல் சமூக ஒழுக்க பிரச்சனையாக பார்க்க வேண்டும் என்று கூறினார். மேலும் சாதி, மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

சமூக மோதல்களை தடுக்க அனைத்து அமைப்புகளுடன் சேர்ந்து காவல்துறையினர் பணியாற்ற வேண்டும் எனவும் குற்றங்களின் விழுக்காட்டை குறைப்பதைவிட குற்றங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார். இதனிடையே கிராமங்களில் உள்ள படித்த மற்றும் படிக்காத இளைஞர்களாலும் இம்மாதிரியான சாதி மோதல் பிரச்சினை உருவாகிறது. மத மோதல்களை தடுப்பதற்கான பிரிவு கோவை மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களில் ஏற்படுத்த ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.

என்எஸ்எஸ், என்சிசி மாணவர்களுடன் இணைந்து போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபடலாம் போன்ற ஆலோசனைகளை வழங்கிய முதலமைச்சர்,தவறு செய்தவர்கள் யாரும் தண்டனையிலிருந்து தப்பி விடக்கூடாது. தடை செய்யப்பட்ட இயக்கங்களை நமது மாநிலத்தில் நுழைய விடாமல் கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.மேலும் சமூக வலைதளத்தல் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த பார்ப்பவர்களை களையெடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மத மோதல்களை அரசியல் உள்நோக்கத்துடன் திட்டுமிட்டு உருவாக்குவதை தடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்த மாநாட்டில் முதலமைச்சரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் ஆய்வு செய்து குறைகளை தீர்த்ததற்காக திருச்சி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மாற்று திறனாளிகளுக்கு சிறப்பாக பணிபுரிந்த நீலகிரி, சிவகங்கை மாவட்ட் ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஊரக வளர்ச்சித் துறை சார்பில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காகத் திருவண்ணாமலை, தேனி, நாமக்கல் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அதே போன்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் சிறப்பாக செயல்பட்ட இராமநாதபுரம், கன்னியாகுமரி,திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொழிலாளர் நலத்துறையில் சிறப்பான செயலாக்கத்துக்குக் கரூர், கோவை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.கோவளம் கடற்கரை தூய்மையான பாதுகாப்பான கடற்கரையாக பேணியதற்காக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு நீலக்கொடி  சான்றிதழ் வழங்கப்பட்டது.

click me!