"ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறதோ அதே தகுதிதான் எனக்கும் இருக்கிறது" - எடப்பாடி அதிரடி பேச்சு…

 
Published : Jun 19, 2017, 08:42 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
"ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறதோ அதே தகுதிதான் எனக்கும் இருக்கிறது" - எடப்பாடி அதிரடி பேச்சு…

சுருக்கம்

tamil nadu cm edappadi palanisamy press meet about qualification of stalin

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போது சட்டப் பேரவைக்குள் நுழைந்தாரோ அப்போதே தானும் வந்து விட்டதாகவும் எனவே அவருக்கு உள்ள தகுதி தனக்கும் இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அமைச்சர் வளர்மதி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , திருச்சி  வந்தார். பின்னர் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார்.

அப்போது ஸ்டாலினுக்கு நிகரான அரசியல்வாதிகள் சட்டமன்றத்தில் இல்லை என்று கூறப்பட்டு வருகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர்,  சட்டப்பேரவை உறுப்பினராக ஸ்டாலின் , எப்போது நுழைந்தாரோ அப்போதுதான் நானும் நுழைந்தேன். 1989ம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்ட போது, நான் எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தேன். அவருக்கு என்ன தகுதி இருக்கிறதோ அதே தகுதி எனக்கும் இருக்கிறது என்று கூறினார். 

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தேர்தல் கமிஷன் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட தகவல் எங்களுக்கு இன்றும் வரவில்லை என கூலாக பதிலளித்தார்.

140 ஆண்டு காலம் இல்லாத அளவு தற்போது தமிழகத்தில் வறட்சி நிலவி வரும் நிலையில் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி  தரும் நடவடிக்கைகளை தற்போது அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!