
தமிழகத்தில் திமுக சரிவை சந்தித்து வருகிறது என்றும், அதிமுக ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடித்தால் திமுக என்ற கட்சி காணாமல் போய்விடும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க எம்எல்ஏக்ககு பணம் மற்றும் தங்கள் கொடுக்க பேரம் பேசப்பட்டது தொடர்பான வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் திமுக அழிந்து வருவதாக தெரிவித்தார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என கனவு காண்கிறார் என்றும் அது ஒரு போதும் நடக்காது எனவும் கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேகமாகவும், திறமையாகவும் செயல்பட வேண்டும் என்றும் பொன்னார் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக சரிவை சந்தித்து வருகிறது என்றும், அதிமுக ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடித்தால் திமுக என்ற கட்சியே காணாமல் போய்விடும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.