
நெல்லை மாவட்ட அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கழக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள மைதானத்தில் நடந்தது.
இதில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கிய போது உடனிருந்த தலைவர்கள், தொண்டர் கள் இன்று எங்கள் பக்கம் இருக்கின்றனர் என்றும் . இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்கு இங்கு பல்லாயிரக்கணக்கான கூடி உள்ளதாக தெரிவித்தார்..
சசிகலா கும்பலிடம் இருந்து கட்சியை காப்பாற்றவே இந்த தர்ம யுத்தம் நடக்கிறது என்றும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சு அவிழும் வரை இந்த தர்மயுத்தம் தொடரும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் பினாமி ஆட்சி, உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க முடியுமா ? என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
எந்த நேரத்தில் எந்த தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி தயாராக இருப்பதாக தெரிவித்த ஓபிஎஸ் அப்படி தேர்தல் நடைபெற்றால் அதில் தங்கள் அணியே வெற்றி பெறும் என கூறினார்.
அதிமுகவைப் பொறுத்தவரை கட்சியின் பொதுச் செயலாளர், தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளருக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும் அதிகாரம் இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.