தமிழக அரசுக்கும் எனக்கும் ஆலோசனை சொல்லுங்க... டாக்டர் ராமதாஸுக்கு போன் போட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

Published : May 09, 2021, 08:38 AM IST
தமிழக அரசுக்கும் எனக்கும் ஆலோசனை சொல்லுங்க... டாக்டர் ராமதாஸுக்கு போன் போட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

சுருக்கம்

தமிழக முதல்வரான தனக்கு ஆலோசனைகள் வழங்கும்படி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.  

தேர்தலில் வெற்றி பெற்று திமுக சட்டமன்றத் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட பிறகு தமிழக மூத்த அரசியல் தலைவர்களான சங்கரய்யா, நல்லக்கண்ணு, ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரைச் சந்தித்து, ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.  இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக நிறுவனரும் மூத்த அரசியல் தலைவருமான டாக்டர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து பெற்றிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இதுதொடர்பாக பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டதற்காக வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார். டாக்டர் ராமதாஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதாகவும்,  கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தொலைபேசியில் பேசுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழக முதல்வரான தமக்கு ஆலோசனைகளை வழங்கும்படியும் டாக்டர் ராமதாஸை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு தமது உளமார்ந்த வாழ்த்துகளை ராமதாஸ் தெரிவித்துக் கொண்டார். முதல்வரிடம் நலம் விசாரித்த ராமதாஸ், தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்கள்.” என்று பாமக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!