முதல்வர் மு.க. ஸ்டாலினை திடீரென சந்தித்த விஜயகாந்த் மகன்... தேமுதிக நிர்வாகிகளும் சந்திப்பு..!

Published : May 09, 2021, 08:15 AM IST
முதல்வர் மு.க. ஸ்டாலினை திடீரென சந்தித்த விஜயகாந்த் மகன்... தேமுதிக நிர்வாகிகளும் சந்திப்பு..!

சுருக்கம்

தமிழக முதல்வராகப்  பதவியேற்ற மு.க. ஸ்டாலினை சந்தித்து தேமுதிக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.  

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சந்தித்து நன்றி தெரிவித்தார். இதேபோல கூட்டணியில் இல்லாத தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திடம் உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார். உதயநிதியின் இந்த செயலுக்கு து சமூக ஊடங்களில் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
இதற்கிடையே தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார். பதவியேற்பு விழாவுக்கு கட்சி பேதங்களைக் கடந்து பல கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று மாலை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தனர். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களான எல்.கே.சுதிஷ், பார்த்தசாரதி மற்றும் விஜயகாந்த மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் இந்த சந்திப்பில் இருந்தனர். இவர்கள் அனைவரும் முதல்வராகப் பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!