தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா வராது.! கொளுத்திப்போடும் அமைச்சர் செல்லூர் ராஜூ.!

Published : Jun 20, 2020, 07:34 PM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா வராது.! கொளுத்திப்போடும் அமைச்சர் செல்லூர் ராஜூ.!

சுருக்கம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு கொரோனா வராது, அப்படி வந்தாலும் உடனே சரியாகி விடும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு கொரோனா வராது, அப்படி வந்தாலும் உடனே சரியாகி விடும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

கொரோனா தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ ..

"தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சக அமைச்சர்கள்  மீது அன்பும் பாசமும் வைத்துள்ளார்.  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோது முதலில் என்னை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறினார். மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.மக்கள் மீது அன்பும், பாசமும் வைத்திருக்கக் கூடிய முதல்வரையும், துணை முதல்வரையும் தமிழகம் பெற்றிருக்கிறது. மக்களின் ஆசியால் அவர்களுக்கெல்லாம் கொரோனா பாதிப்பு வராது. வந்தாலும் உடனே சரியாகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் புதிதாக 2,115 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு  54 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் மட்டும் 1,322 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 327 ஆக உயர்ந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!