ஊரடங்கால் மின் கட்டணம் செலுத்த அவகாசம்... மின்சாரவாரியம் அறிவிப்பு..!

Published : Jun 20, 2020, 05:11 PM IST
ஊரடங்கால் மின் கட்டணம் செலுத்த அவகாசம்... மின்சாரவாரியம் அறிவிப்பு..!

சுருக்கம்

ஊரடங்கு காரணமாக ஜூலை 15-ந் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக ஜூலை 15-ந் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கான காலவரையறையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஊரடங்கு காரணமாக ஜூலை 15-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 4 மாவட்டத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 15-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் மின் நுகர்வோர்கள் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை இணையத்தில் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மேலும், ஜூலை 15-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் என்று அலுவலர்களுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன்.. பிரதமரை வறுத்தெடுத்த ஸ்டாலின்.. இபிஎஸ் மீதும் சரமாரி அட்டாக்!
ஒபிஎஸ்ஸின் ஒரே நம்பிக்கையும் போச்சு.. விஜய்யுடன் கை கோர்த்த அதிமுக முன்னாள் அமைச்சர்!