2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் முக்கியத்துவம் பெற்ற முக்கிய அம்சங்கள்...

By sathish kFirst Published Feb 8, 2019, 12:29 PM IST
Highlights

2019- 2020-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் பெற்ற முக்கிய அம்சங்கள்...
 

தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும்.

தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 44.176 கோடி - பட்ஜெட்டில் தகவல்.

செலவீனங்கள், 208617 கோடியாக இருக்கும் என கணக்கீடு.

வரும் நிதியாண்டில் தமிழக கடன் அளவு 3.97 லட்சம் கோடியாக இருக்கும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,178 கோடி ஒதுக்கீடு.

குடிநீர் வழங்கல் துறைக்கு 18,700 கோடி ஒதுக்கீடு.

வீட்டு வசதி துறைக்கு 6,265 கோடி ஒதுக்கீடு.

தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 44.176 கோடி.

செலவீனங்கள், 208617 கோடியாக இருக்கும் என கணக்கீடு.

வரும் நிதியாண்டில் தமிழக கடன் அளவு 3.97 லட்சம் கோடியாக இருக்கும்.

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் ஒரு பகுதியாக சுய பயன்பாட்டிற்கு ரூ.132.80 கோடி செலவில் சூரிய ஒளி மின்திட்டம்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கு தமிழக அரசு ரூ.40,941 கோடி நிர்வாக அனுமதி அளித்து உள்ளது.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய வெள்ள தடுப்பணை கட்டப்படும்.

நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ284 கோடி ஒதுக்கீடு.

ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய சக்தி திட்டம்.

ரூ. 2,350 கோடியில் 500 மெகாவாட் கடலாடி மிக உய்ய  சூரிய பூங்கா திட்டம் உருவாக்கப்படும்.

பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பெண்குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டத்திற்கு ரூ.47.7 கோடி ஒதுக்கீடு.

அரசு பல்கலைக் கழக கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிக்கு ரூ.296 கோடி ஒதுக்கீடு.

தமிழக காவல்துறைக்கு ரூ.8.084 கோடி ஒதுக்கீடு.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய வெள்ள தடுப்பணை கட்டப்படும்.

நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ284 கோடி ஒதுக்கீடு.

மொத்தம் 2,000 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.

சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்.

நலிவடைந்த பிரிவினருக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது வேட்டி, சட்டை இலவசமாக தரப்பட்டது.

ஹார்வார்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டுள்ளது.

பிற சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

சூரிய ஒளி மின்சக்தி கொள்கை 2019, மாநிலத்தின் சூரியஒளி மின்சக்தி உற்பத்தி திறனை 2023-க்குள் 9,000 மெகாவாட் அளவுக்கு உயர்த்த வழிவகை செய்யும்.

பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்கு ரூ.18,560.77 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் 2698 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தின் வளர்ச்சி வரும் நிதியாண்டில் 8.16 சதவீதமாக இருக்கும்.

தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது.

கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட குறியீடுகளில் தனிக்கவனம்.

மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிதியத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.

சூரிய ஒளி மின்சக்தி கொள்கை 2019, மாநிலத்தின் சூரியஒளி மின்சக்தி உற்பத்தி திறனை 2023-க்குள் 9,000 மெகாவாட் அளவுக்கு உயர்த்த வழிவகை செய்யும்.

பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்கு ரூ.18,560.77 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் 2698 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன.

படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்தார்.

ஆழ்கடல் மீனவர்களின் தொலைத் தொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படும்.

80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொடர்பு கருவிகள் வழங்கப்படும்.

10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக 313.58 கோடி ஒதுக்கீடு.

பசுமை எரிசக்தி மேம்படுத்த தேனி சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 1,125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 250Mw சூரிய சக்தி மின் திட்டங்களும், 2350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500MWகடலாடி மின் மிக உய்ய சூரிய மின் அழுத்த பூங்கா திட்டமும்  மூலம் செயல்படுத்தப்படும்.

ஆழ்கடல் மீனவர்களின் தொலைத் தொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படும்

80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொடர்பு கருவிகள் வழங்கப்படும்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை , சித்திக் குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளது .

அப்துல் கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் .

2019 - 2020 ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் 3,97,495.96 கோடி கடந்த ஆண்டை விட 41,651.96 கோடி அதிகம்.

click me!