உருப்படியா ஒரு முடிவையும் எடுக்கல... ஆனா கோஷ்ட்டி உள்ளடி வேல நடக்குது!! அதான் திமுகவில் இணைஞ்சு வெற்றிக்கு பாடுபடப்போறோம்...

By Vishnu PriyaFirst Published Feb 8, 2019, 12:02 PM IST
Highlights

பிளந்தது மன்றம், உடைந்து கலங்கும் ரஜினி: சொந்த ஊரிலேயே செல்வாக்கை இழக்கும் சூப்பர் ஸ்டார்! அடுத்தடுத்து மன்றத்தை மடக்க வெறியாய் இயங்கும் ஸ்டாலின்.

தன்னைப் பார்த்து ’பஞ்சம் பிழைக்க வந்த கர்நாடககாரன்!’ என்று யாராவது சொன்னால், ரஜினி திருப்பி அடிப்பது ‘என் சொந்த மண் தமிழ்நாடுடா. கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம்தான் என் சொந்த ஊருடா!’ என்பார் கெத்தாக. கிருஷ்ணகிரி மீது ரஜினிக்கு அவ்வளவு கிறக்கம் எப்போதுமே உண்டு. அதே மண் தான் இன்று ரஜினியை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

பஞ்சாயத்து இதுதான்....அரசியலை நோக்கி நகரும் முயற்சியில் முக்கிய ஒன்றாக, தன் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார் ரஜினி. அதற்கு சில தலைமை நிர்வாகிகளைப் போட்டு என்னவெல்லாமோ செய்து பார்த்தார், ஆனால் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகள் சிக்கல்கள். 

இது ஒருபுறமிருக்க, ரஜினியின் மக்கள் மன்றத்தில் மாநிலத்திலேயே அதிக உறுப்பினர்களை சேர்த்த மாவட்டம் என்று பெயர் பெற்றது கிருஷ்ணகிரிதான். காரணம் ரஜினியின் சொந்த மாவட்டம் என்பதே. இந்நிலையில் அந்த மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளரான மதியழகன் இன்று மாலை ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைகிறார் என்று தகவல்கள் தடதடக்கின்றன. 

இதுமட்டுமல்ல இன்று முக்கிய நிர்வாகிகள் நாற்பது  பேருடன் இணையும் மதியழகன், வரும் 24ம் தேதியன்று கிருஷ்ணகிரியில் ஸ்டாலின் முன்னிலையில் சுமார் இருபத்தைந்தாயிரம் பேரை பெரும் விழா எடுத்து இணைக்கிறாராம். எல்லாமே பக்காவாக திட்டமிடப்பட்டு, தெளிவாக நடத்தப்படுகின்றன என்கிறார்கள்.  

ஏன் இந்த திடீர்  தாவல்? என்று கேட்டால்...”அரசியல் விஷயத்துல உருப்படியா எந்த முடிவையும் எடுக்க மாட்டேங்கிறார். மன்றத்தின் மாநில நிர்வாகிகளாக வந்து உட்காரும் கண்ட நபர்களும் படுத்தும் பாடும், ஆடும் ஆட்டமும் தாங்க முடியலை. ஒரு மாயைக்காக உழைச்சு கொட்டுறதை விட, யதார்த்தமான தி.மு.க.வில் இணைஞ்சு அதன் வெற்றிக்கு பாடுபடப்போறோம்!” என்கிறார்கள். 

இந்நிலையில், தன் ஆசை கிருஷ்ணகிரியில் மன்றம் உடைபடும் செய்து ரஜினியின் காதுகளுக்குப் போக, மனிதர் மண்டை காய்ந்து உட்கார்ந்துவிட்டாராம். சொந்த மண்ணிலேயே செல்வாக்கு சரிவது மட்டுமல்ல, தமிழகத்தில் உடையும் முதல் மன்றம் இது. இதை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு வரிசையாக பிளவுகள் இனி நடக்க துவங்கிவிடுமே! எனும்  பெரும் கவலைதான். 

இது ஒருபுறமிருக்க, ரஜினி மீது அதிருப்தியில் இருக்கும் அவரது மன்ற தலைமை நிர்வாகிகள் எந்தெந்த மாவட்டங்களில் இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் அணுகி, இழுக்கும்படி கட்சியின் நிர்வாகிகளுக்கு  உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின். 
அழகிரிக்கு அரசியல் ரீதியில் வாழ்த்து சொல்வது, அரசியலுக்குள் காலே எடுத்து வைக்காமல் தன்னைப் பற்றி ஓவராய் விமர்சிப்பது, டென்ஷன் கிளம்பும் வகையில் உள்ளடி வேலைகள் பார்ப்பது என்று இருக்கும் ரஜினிக்கு ஸ்டாலின் வைக்கப்போகும் நான்ஸ்டாப் செக் இவை! என்கிறார்கள்.

click me!