கொத்தா திமுகவுக்கு தாவும் ரஜினி ரசிகர்கள்... இன்று மாலை ஸ்டாலின் முன்னிலையில் இணையும் மாவட்ட செயலாளர் மதியழகன்!!

By sathish kFirst Published Feb 8, 2019, 11:48 AM IST
Highlights

ரஜினி கட்சி ஆரம்பிப்பதில் வீண் காலதாமதம் செய்கிறார். தலைமை மன்றத்தின் முக்கிய பிரமுகர்களும் யாரும் தன்னை மதிப்பதில்லை என்கிற காரணத்தால், அவர் அடுத்தகட்ட அரசியல் முடிவை எடுத்துள்ளார் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் மதியழகன். 
 

கால் நூற்றாண்டு காலமாக அரசியலுக்கு அதோ வரேன், இதோ வரேன் என ரசிகர்களின் காதில் உலக்கையை விட்டு ஆட்டி வந்தார் நடிகர் ரஜினிகாந்த், தமிழக அரசியலில் ஜாம்பவான்களாகவும் இந்திய அரசியலில் மதிக்கத்தக்க இடத்தில் இருந்த கருணாநிதியும்,ஜெயலலிதாவும் மறைந்ததும் ஏதோ கடமைக்கென்று அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.  கட்சி ஆரம்பிக்கப்படும் என ரஜினிகாந்த் அறிவித்து ஓர் ஆண்டு ஆகியும் அடுத்தகட்டத்துக்கு செல்லாமல் காலா, பேட்ட என படம் நடிப்பதில் பிஸியாக இருந்த அவர்.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அரசியல் கட்சி கூட்டணி வேலைகளில் பிசியாக இருக்கும் சூழலில் தனது இரண்டாவது மகள் கல்யாண வேலையில் பிசியாக இயக்கிறார். 

சரி கல்யாணம் முடிந்த பிறகாவது கட்சி வேலை எனத் தெளிவாக தெரிகிறது,  உற்சாகமாக இருந்த ரசிகர்கள் டல்லாகிப் போனதால், திமுக அதிமுக என பல கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இதன் முதல்கட்டமாக  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உடைந்தது ரஜினி மக்கள் மன்றம்.

இன்று ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகள் 40 பேருடன் திமுக தலைவர் மு.க.ஸ்லைகளில் கவனம் செலுத்துவாரா எனப் பார்த்தல் மனுஷன் அடுத்தது முருகதாஸ், திரும்பவும் மரணமாஸ், கொல மாஸ் எனக் கூவி வரும் கார்த்திக் சுப்புராஜ் படம் என ஒரு பெரிய லிஸ்ட்டே வச்சிருக்காரு. 

ரஜினியின் இந்த பயங்கர பிஸி ஷெடியூலால் இப்போது கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை எனத் தெளிவாக தெரிகிறது,  உற்சாகமாக இருந்த ரசிகர்கள் டல்லாகிப் போனதால், திமுக அதிமுக என பல கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இதன் முதல்கட்டமாக  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உடைந்தது ரஜினி மக்கள் மன்றம்.

இன்று ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகள் 40 பேருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணையும் மதியழகன், வரும் 24ம் தேதி கிருஷ்ணகிரியில் பிரமாண்டமாக நடைபெறும் கூட்டத்தில் 25 ஆயிரம் பேர் திமுகவில் இணையவுள்ளதாக அதிகாரப்போர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ரஜினிகாந்த் பிறந்த ஊரான நாச்சிகுப்பம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் உள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தில் தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்த மாவட்டம் கிருஷ்ணகிரி தான். ஆனால் தற்பொழுது, தமிழகத்தில் முதலில் ரஜினி மக்கள் மன்றம் உடையும் மாவட்டம் கிருஷ்ணகிரி தான். இதனால் ரஜினியின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

click me!