தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லாது.. ஒரே போடு போட்ட சுப்பிரமணியன் சுவாமி..!

By vinoth kumarFirst Published Mar 10, 2021, 4:23 PM IST
Highlights

தமிழகத்தில் தேசிய கட்சியான பாஜக வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேசிய கட்சியான பாஜக வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவரும்,  எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொகுதிகளை இறுதி செய்வதற்காக அதிமுக தலைவர்களோடு பாஜகவை சேர்ந்த முருகன், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து பேச்சுவார்த்தையில் இடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக நீடித்து தொகுதி பங்கீடு ஒருவழியாக முடிந்தது. இன்று அல்லது நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமியிடம் தமிழகத்தில் பாஜக வெற்றிபெறுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் தமிழகத்தில் பாஜக 2 அல்லது 3 இடங்களில் வெல்லும். இல்லாவிடில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. தேசிய கட்சியான பாஜக வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிருக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். 

click me!