சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு முரசு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு முரசு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு கட்சியும் தங்களது சின்னத்தை கேட்டு பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தில் மனுக்கொடுத்துள்ளனர். இதனையடுத்த, கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி குறித்து தேமுதிக தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆனால் தாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தர மறுத்ததால் அதிருப்தியடைந்த தேமுதிக நேற்று அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.
undefined
இதனையடுத்து, வருகிற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடலாமா? அமமுகவிடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாமா என்ற குழப்பத்தில் இருந்து வரும் நிலையில் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கியுள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக தொடங்கப்பட்ட 16 ஆண்டுகளில் இதுவரை 3 சட்டப்பேரவைத் தேர்தல்களையும், 3 நாடாளுமன்றத் தேர்தல்களையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.