சசிகலா சொன்ன ரகசியத்தை டமாரென போட்டுடைத்த சீமான்... அட இப்படியொரு கோரிக்கையா..?

By Thiraviaraj RMFirst Published Mar 10, 2021, 4:11 PM IST
Highlights

நானும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று அழுத்தவில்லை. ஏனெனில், நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன் என்று அவருக்குத் தெரியும்

அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக்கூறி சசிகலா தன்னை எடப்பாடி பழனிசாமியிடம் பேச வேண்டிக்கொண்டார் என நாம் தமிழர்க் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளில் சசிகலாவை அவரது இல்லத்திற்கு சென்று ஒரு மணி நேரம் பேசினார் சீமான். அவர் என்ன பேசினார் என்பது குறித்து இப்போது வரை தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், சசிகலாவை சந்தித்தது ஏன்? என்று தெரிவித்துள்ளார். 

’’சசிகலா சிறையிலிருந்து திரும்பியதும் நான் அவரை நேரில் சந்தித்தேன். அவர் என்னையும், என் மனைவியையும் பார்க்க விரும்பினார். அவரின் அழைப்பிலேயே நான் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் தனிப்பட்ட விஷயங்களைத் தவிர்த்து அரசியலும் பேசப்பட்டது. எதிர்வரும் தேர்தலில் அதிமுகவுடன் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா உளமாற விரும்பினார். எடப்பாடி பழனிச்சாமியிடம் சமாதானம் அதிமுகவும் அமமுகவும் இணைவதற்கு நான் சமாதானம் பேச வேண்டும் என அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நான் நன்றாகப் பேசுவேன். நான் பேசிப் பார்க்கிறேன் என சொன்னேன். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. அதிமுக உடன் கூட்டணி சேர அழுத்தம் தரவில்லை. நானும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று அழுத்தவில்லை. ஏனெனில், நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன் என்று அவருக்குத் தெரியும்.’’ எனத் தெரிவித்துள்ளார்

click me!