உங்கள் தடையை தமிழக பாஜக ஏற்காது.. அரசுக்கு சவால் விடும் அண்ணாமலை..

Published : Sep 01, 2021, 12:09 PM IST
உங்கள் தடையை தமிழக பாஜக ஏற்காது.. அரசுக்கு சவால் விடும் அண்ணாமலை..

சுருக்கம்

கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு சூழல் தான் இருந்தது. நான் ஒன்றைச் சொல்கிறேன், விநாயகர் சக்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் பொறுப்பை விட்டு விடுங்கள், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சிறப்பாக விழாவை அவர்கள் நடத்தி காட்டுவார்கள், 

கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு அரசு தடை விதித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது, புதுச்சேரி மாநில பாஜக அனைத்து மாநில பாஜகவுக்கும் உத்வேகம் தரக்கூடியதாக உள்ளது. இங்கு நடக்கும் அற்புதமான ஆட்சியைப் பார்த்து மக்கள் ரசித்து பாராட்டுகின்றனர். இதற்கு முன்பு இருந்த முதல்வர் செயல்படாத வராக இருந்தார். 

எதற்கெடுத்தாலும் மத்திய அரசை பழி  போடும் அரசாக அது இருந்து வந்தது. இப்போது ஆரோக்கியமான முறையில் ஆட்சி நடக்கிறது, புதுச்சேரியில் பாஜக மலராது, ஆட்சி அமையாது என கூறி அவர்களை பாஜக தலைவர்கள் முறியடித்துள்ளனர். அதேபோல கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பொது இடத்தில் சிலை வைக்கக்கூடாது, பேரணியாக சென்று சிலைகளை கரைக்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிமனிதராக விநாயகரை வழிபடலாம் சிலையை கரைத்துக் கொள்ளலாம் என சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு வித்தியாசமான அறிவிப்பாக பார்க்கிறேன்.

கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு சூழல் தான் இருந்தது. நான் ஒன்றைச் சொல்கிறேன், விநாயகர் சக்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் பொறுப்பை விட்டு விடுங்கள், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சிறப்பாக விழாவை அவர்கள் நடத்தி காட்டுவார்கள், விநாயகர் சதுர்த்தி காலங்காலமாக நமது வாழ்க்கை முறையில் கலந்த ஒன்றாக மாறிவிட்டது. டாஸ்மாக்கை திறந்து அதிகமாக  கூட்டம் கூட அனுமதிக்கிற அரசு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தனை விதிக்கிறது.  கட்டுப்பாடுகளை விதிக்கலாம் ஆனால் நடக்கவே கூடாது என சொல்வதை பாஜக ஏற்றுக் கொள்ளாது. இதுகுறித்து முதல்வரை சந்தித்து முறையிடுவதா, அல்லது எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து இதை எப்படி எடுத்துச் சொல்வது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என அவர் கூறினார். 

 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!