மனைவி வீடு திரும்பிவிடுவார் என மகிழ்ச்சியில் இருந்த ஓபிஎஸ். அதிகாலையில் தலையில் விழுந்த இடி. என்னதான் நடந்தது.

By Ezhilarasan BabuFirst Published Sep 1, 2021, 11:34 AM IST
Highlights

விஜயலட்சுமி (66) அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு அதிகாலை 5 மணி அளவில் தீவிர மாரடைப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக இதயநோய் நிபுணர்கள் சிகிச்சை அளித்தும் பயனின்றி 6 :45 மணி அளவில் அவர் இயற்கை எய்தினார் என்றும் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான பன்னீர்செல்வத்தின் மனைவி இன்று அதிகாலை உயிரிழந்தார். சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயலட்சுமி மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அவரது உயிரிழப்பு  பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தாரை நிலைகுலைய செய்துள்ளது. இந்நிலையில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள்  கட்சி தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

உண்மையிலேயே விஜயலட்சுமிக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர் அனுமதிக்கப்பட்டிருந்த பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம், விளக்கமாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவியார் திருமதி. விஜயலட்சுமி (66) அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

உடல் நலமடைந்து மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்ப இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் தீவிர மாரடைப்பு உள்ளானார் உடனடியாக இதய நோய் நிபுணர்கள் தீவிர சிகிச்சை நிபுணர்கள் தக்க சிகிச்சை அளித்தும் பலனின்றி 6:45 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!