மனைவியின் பிரிவால் வாடும் ஓபிஎஸ்.. இலங்கையில் இருந்து வந்த இரங்கல் செய்தி.. செந்தில் தொண்டமான் உருக்கம்.

Published : Sep 01, 2021, 11:11 AM ISTUpdated : Sep 01, 2021, 11:16 AM IST
மனைவியின் பிரிவால் வாடும் ஓபிஎஸ்.. இலங்கையில் இருந்து வந்த இரங்கல் செய்தி.. செந்தில் தொண்டமான் உருக்கம்.

சுருக்கம்

மனைவியை இழந்து வாடும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உ.ப தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கள் தெரிவித்துள்ளார். 

மனைவியை இழந்து வாடும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உ.ப தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கள் தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, மதிப்பிற்குரிய திரு. பன்னீர் செல்வம் அவர்களுக்கு வணக்கம். தங்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்கள் மறைந்த செய்தி  கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். தங்கள்  துணைவியாரின் மறைவுக்கு இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சார்பாக தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் மனைவியின் ஆன்மா சாந்தியடைய இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சார்பாக பிரார்த்தனை செய்கிறோம். 

இந்த கடினமான சூழலில் இருந்து தங்கள் குடும்பம் மீண்டு வரவும் இறைவனை வேண்டுகிறோம். என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உ.ப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி காலமானார் இன்று காலை காலமானார். ஒருவாரகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் காலமானார். அவருக்கு வயது (63)  அவரின் மறைவால் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான  ஓ.பன்னீர்செல்வத்திற்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். ஓபிஎஸ் மனைவியாரின் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மருத்துவமனைக்கு  நேரில் சென்று  விஜயலட்சுமி அம்மையார் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் இலங்கை தமிழர்கள் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உ.ப தலைவர் செந்தில் தொண்டமான் ஓபிஎஸ்க்கு இரங்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!