13 ஆயிரம் கிராமங்களில் படை அமைக்கும் தமிழக பாஜக.. விஸ்வரூபம் எடுக்கும் அண்ணாமலை.. அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 11, 2021, 1:13 PM IST
Highlights

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.. ஒருவன் துன்பம் வருவதற்கு முன்னரே, திட்டமிட்டு அந்தத் துன்பத்திலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவில்லை என்றால் அவனுடைய வாழ்வு தீயில் இடப்பட்ட வைக்கோலைப் போல அழிந்து கெடும். 

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.. ஒருவன் துன்பம் வருவதற்கு முன்னரே, திட்டமிட்டு அந்தத் துன்பத்திலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவில்லை என்றால் அவனுடைய வாழ்வு தீயில் இடப்பட்ட வைக்கோலைப் போல அழிந்து கெடும். என்ற குறள் நெறிக்கு ஏற்ப பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வள்ளுவர் வாக்கின் வழிநின்று, உலகை அச்சுறுத்தும் மூன்றாம் கொரோனா அலை வருவதற்கு முன்னரே தடுக்கவும், மீறி அப்படி வந்தாலும் அப்போதும் அதனை தடுக்க திட்டமிடுகிறார் என தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 

கொரோனா மூன்றாவது அலையை தடுக்க நாடு முழுவதும் சுகாதார தன்னார்வலர்கள் குழு அமைக்கப்படுகிறது. தமிழ் மாநிலத்தில், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆக நியமிக்கப்பட்டுள்ள 240 பேருக்கு மாநில சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் திண்டிவனத்தில் நடைபெற்றது. மோடி அவர்களின் தன்னலம் கருதாத ஆர்வமிக்க சுகாதார படையின் சேவகர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், ஆக்சிஜன் சிலிண்டர் ஆம்புலன்ஸ் போன்ற சேவைகளை தர கூடிய முகவர்கள் ஆகியோர்கள் அடங்கிய சுகாதார மருத்துவ தன்னார்வலர்கள் குழு  தமிழகத்தின் 13,000 கிராமங்களிலும் அமைக்கப்பட இருக்கிறது. 

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் எப்போதும் நேரடியாக மக்கள் தொடர்பு கொண்டு செயலாற்றுபவர். இந்த முறையும் மூன்றாவது அலையை தடுக்க ஒவ்வொரு இல்லத்தையும் தன்னார்வ சுகாதார சேவை படையின் தொண்டர்களால் தொடர்பு கொள்ள போகிறார்கள். இது சாத்தியமா? ... ஜன்தன் யோஜனா திட்டம் கொண்டு வந்த போதும்... இப்போது மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் நேரடியாக எப்படி அவர்கள் வங்கிக் கணக்கில் சென்று சேர்கிறது, அதுபோல அரசு வழங்கும் உதவிகளையும் விழிப்புணர்வு சேவையையும் நேரடியாக ஒவ்வொரு இல்லத்தின் கதவைத் தட்டி உதவிகள் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் நம் பாரத பிரதமர். 

தன்னலமற்ற மக்கள் தொண்டுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்ற முழக்கத்துடன் பாஜகவின் மருத்துவ, சுகாதாரத் தொண்டர்கள் களம் காணும் பயிற்சி முகாம், எனது தலைமையில், மூத்த தலைவர் இல. கணேசன் அவர்கள் முன்னிலையில், முன்னாள் தேசிய செயலாளர். திரு.ஹெச் ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் திரு.கே.டி.ராகவன், திரு.கரு.நாகராஜன், ஆகியோரின் முன்னிலையில் பல்வேறு பகுதிகளாக நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைப்புச் செயலாளர் திரு.பி.எல்.சந்தோஷ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
மாலை இறுதி நிகழ்வில் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நாள் முழுதும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து, பயிற்சியின், தொண்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார தன்னார்வத் தொண்டின், மாநில பொறுப்பாளர்கள் திருமதி.கார்தியாயினி, திருமதி. மீனாட்சி நித்யசுந்தர் திரு. CTR.நிர்மல்குமார் Dr. சரவணன் ஆகியோர் விரிவாகச் செய்திருந்தனர். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!