சீப்ரோஸ் டூ எம்எல்ஏ ஹாஸ்டல்..! நூலிழையில் தப்பிய எஸ்.பி.வேலுமணி..! அதிகாலையில் நடந்தது என்ன?

By Selva KathirFirst Published Aug 11, 2021, 12:43 PM IST
Highlights

எஸ்பி வேலுமணி தொடர்புடைய கோவை, சென்னை, திண்டுக்கல், திருவள்ளூர் என சுமார் 50 இடங்களில் ஆரம்பமான ரெய்டு பிறகு 60 இடங்களை எட்டியது. எஸ்பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன், நெருக்கமான நண்பர்கள், நெருக்கமான ஒப்பந்ததாரர்கள், நெருக்கமான அதிகாரிகள் என ஒரு பட்டியல் போட்டு அவர்கள் வீடுகளுக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை புகுந்தது. 

எதிர்பார்த்தது போலவே எஸ்பி வேலுமணி வீடு, அலுவலகங்கள் என ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுமார் 12 மணி நேரம் விசாரணையும் நடத்தி முடித்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது மு.க.ஸ்டாலினால் அதிகம் விமர்சிக்கப்பட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எஸ்.பி.வேலுமணி சிறையில் அடைக்கப்படுவது உறுதி என்றெல்லாம் ஸ்டாலின் பேசி வந்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 3 மாதங்களை நெருங்கும் நிலையிலும் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய வழக்குகளில் திமுக அரசு மவுனம் காத்து வந்தது. இது கடும் விமர்சனத்திற்கு ஆளான நிலையில் நேற்று காலை ஒரே நேரத்தில் சுமார் 50 இடங்களில் ரெய்டை நடத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை.

எஸ்பி வேலுமணி தொடர்புடைய கோவை, சென்னை, திண்டுக்கல், திருவள்ளூர் என சுமார் 50 இடங்களில் ஆரம்பமான ரெய்டு பிறகு 60 இடங்களை எட்டியது. எஸ்பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன், நெருக்கமான நண்பர்கள், நெருக்கமான ஒப்பந்ததாரர்கள், நெருக்கமான அதிகாரிகள் என ஒரு பட்டியல் போட்டு அவர்கள் வீடுகளுக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை புகுந்தது. அந்த நேரத்தில் எஸ்பி வேலுமணி சென்னை எம்ஆர்சி நகரில் தனக்கு சொந்தமான சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தார். சீப்ரோஸ் நிறுவனம் கட்டிய இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்தில் வேலுமணிக்கு 4 வீடுகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஒரு வீட்டில் வேலுமணியும், மற்றொரு வீட்டில் அவரது சகோதரர் அன்பரசனும் மற்ற இரண்டு வீடுகள் அலுவலகங்களாகவும் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அங்கு வைத்து எஸ்பி வேலுமணியை லாக் செய்ய வேண்டும் என்பது தான் லஞ்ச ஒழிப்புத்துறையின் திட்டமாக இருந்தது. சீப்ரோஸ் குடியிருப்பிற்குள் அவ்வளவு எளிதாக யாராலும் நுழைந்துவிட முடியாது. வேலுமணியிடம் விசாரணை நடைபெறும் போது அதிமுக சார்ந்த வழக்கறிஞர்கள், தொண்டர்களால் பிரச்சனை ஏற்படாமல் இருக்க சீப்ரோஸ் குடியிருப்பு தான் சரியாக இருக்கும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கு போட்டு வைத்திருந்தது.

மேலும் எஸ்பி வேலுமணிக்கு அங்கு வீடு இருக்கிறது என்பது அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலருக்கு கூட தெரியாது. எனவே ரெய்டு நடைபெறும் போது எஸ்பிவேலுமணியை அங்கு வைத்து மடக்கினால் விசாரிப்பது எளிது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால் காலை 6 மணிக்கு அதிகாரிகள் சீப்ரோஸ் குடியிருப்பிற்குள் நுழைந்த போது உடனடியாக எஸ்பி வேலுமணிக்கு செக்யூரிட்டிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தான் அணிந்திருந்த ஸ்போர்ட்ஸ் டிராக் பேன்ட் மற்றும் டீ சர்ட்டுடன் பின் பக்க வழியாக எஸ்பி வேலுமணி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

டிரைவர் கூட இல்லாமல் காரை அவரே ஓட்டிச் சென்றதாக சொல்கிறார்கள். வேறு எங்கு சென்றாலும் போலீசாரின் கிடுக்கிப்பிடியில் சிக்க நேரிடும் என்பதால் நேராக எம்எல்ஏ ஹாஸ்டல் சென்றுள்ளார் எஸ்பி வேலுமணி. அவர் வீட்டில் ரெய்டு நடைபெறும் விஷயம் அப்போது அங்கிருந்த காவலர்களுக்கு தெரியாது, எனவே அவரை எவ்வித தடுப்பும் இன்றி போலீசார் உள்ளே அனுமதித்துள்ளனர். இதனிடையே வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் எஸ்பி வேலுமணி எங்கு சென்றார் என்கிற விசாரணையை தீவிரப்படுத்த, அவரே லஞ்ச ஒழிப்புத்துறையினரை தொடர்பு கொண்டு எம்எல்ஏ ஹாஸ்டலில் இருப்பதாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து காலை ஒன்பது மணி அளவில் அங்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணையை முன்னெடுத்தனர். அப்போது அதிமுக வழக்கறிஞர்களும் அங்கு வந்து சேர்ந்துவிட்டதால் விசாரணையில் பெரிய அளவில் சிக்கல் ஏற்படவில்லை என்கிறார்கள். அந்த வகையில் விசாரரணையை சரியான முறையில் எஸ்பி வேலுமணி எதிர்கொண்டவிட்டதாகவே கூறுகிறார்கள்.

click me!