எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு... அம்மனுக்கு வளையல், மாங்கல்யம் மஞ்சள் வைத்து வழிபட்ட விஜயபாஸ்கர்..!

Published : Aug 11, 2021, 12:15 PM IST
எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு... அம்மனுக்கு வளையல், மாங்கல்யம் மஞ்சள் வைத்து வழிபட்ட விஜயபாஸ்கர்..!

சுருக்கம்

எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயிலில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழிபாடு நடத்தியுள்ளார். 

இதுவரை திமுக அரசு போட்டு வைத்துள்ள ரெய்டு பட்டியலில் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோரது வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

 

இந்த லிஸ்டில் முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தங்கமணி உள்ளிட்டவர்களின் பெயர்களும் அடிபட்டு வருகின்றன. முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயிலில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழிபாடு நடத்தியுள்ளார். 

முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான சி.விஜயபாஸ்கர் விராலிமலை ஸ்ரீ மெய்க்கண்ணுடையாள் கோயிலில் அம்மனுக்கு வளையல், மாங்கல்யம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவற்றை வழங்கி வழிபாடு நடத்தினார். அதிமுக அமைச்சர்கள் அரசு பதவியை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்களின் ஊழல் புகார் குறித்த பட்டியலை ஆளுநரிடம் அளித்தார். அதில் அப்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ரெய்டில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே விஜயபாஸ்கர் இந்த வழிபாட்டை நடத்தியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!