நம்மை மொட்டை அடிக்கவே மொட்டை இலவச திட்டம்... திமுகவை சீண்டும் அண்ணாமலை..!

Published : Sep 05, 2021, 04:58 PM IST
நம்மை மொட்டை அடிக்கவே மொட்டை இலவச திட்டம்... திமுகவை சீண்டும் அண்ணாமலை..!

சுருக்கம்

திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடி காணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் திருக்கோயில் நிர்வாகமே செலுத்தும் என்று அறிவித்தார். 

கடவுள் இல்லை என்று சொல்வோர் சட்டப்பேரவையில் கடவுள் பற்றியே விவாதித்து வருகின்றனர் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று இந்து சமய அறநிலைதுறை சார்பாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில், பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு;- திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடி காணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் திருக்கோயில் நிர்வாகமே செலுத்தும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பாஜக அடுத்த கட்டத்துக்கு நகரத் தயாராக உள்ளது. தற்போது 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த 5 வருடங்களில் 150 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பர். கடவுள் இல்லை என்று சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆண்டாள் கோவில் கோபுர முத்திரையை பயன்படுத்துகிறார். கடவுள் இருக்கிறார் என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். 

நம்மை மொட்டை அடிப்பதற்காகத்தான் மொட்டை போட இலவசம் என திமுக அரசு அறிவித்துள்ளது. இதுவே திமுகவின் கடைசி கால ஆட்சி, இனிமேல் திராவிடத்திற்கு தமிழகத்தில் வேலை இல்லை. திமுகவை ஒழித்துவிட்டு பாஜகவை ஆட்சி அமைக்க வைப்பதே என் வேலை. வழக்கு போட்டு மிரட்டினாலும், எதற்கும் பயப்பட கூடிய ஆள் நான் இல்லை. சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. விரைவில் விலை குறைக்கப்படும். அதுவரை மக்கள் பொருத்து கொள்ள வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. கனிமக் கொள்ளை.. முதல்வர் ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்!
அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி சட்டவிரோதம்.. தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்!