தர லோக்கல் மோதலுக்கு தயாராகும் தமிழக பி.ஜே.பி..? வேட்டி கிழிப்பு, மண்டையுடைப்புக்கு முன் அமைதியாக்குவாரா அமித்ஷா ஜி..?

By Vishnu PriyaFirst Published Feb 13, 2019, 4:34 PM IST
Highlights

தமிழகம் வரும் அமித்ஷா இந்தப் பிரச்னையை சீரியஸாக எடுத்து விசாரணை நடத்தி, ஒருங்கிணைப்பு ஏற்படுத்தவில்லை என்றால் தாமரை மலர்வதை தமிழக பி.ஜே.பி.யே தடுத்துவிடும்! என்கிறார்கள்.

காங்கிரஸுக்கே கன்னாபின்னான்னு சவால் விடுமளவுக்கு தாறுமாறாக வளர்ந்து வருகிறது தமிழக பி.ஜே.பி! என்கிறார்கள். எதில் தெரியுமா? உட்கட்சி பஞ்சாயத்தில்தான்.

தமிழக பி.ஜே.பி.யில் புதியதாய் தலைகள் தலையெடுக்க தலையெடுக்க கோஷ்டிகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இன்றைய தேதிக்கு தமிழிசை டீம், ஹெச்.ராஜா டீம், பொன்னார் டீம், இல.கணேசன் டீம், வானதி டீம் ஆகியவை பிரதானமாக இருக்கின்றன. இது போக, சுப்பிரமணியன் சுவாமி தனி லாபி, எஸ்.ஆர்.சேகர் தனி லாபி, ராகவன் தனி லாபி, சி.பி.ராதாகிருஷ்ணன் தனி லாபி, இளைஞரணி முருகானந்தம் தனி லாபி என்று ஓடிக் கொண்டிருக்கிறது. சூழ்நிலை இவ்வளவு மோசமாக சிதறிச் சிதறிக் கிடப்பது இதுவரையில் பெரிதாக வெளியே தெரியாமல்தான் இருந்தது. ஆனால் சமீபத்தில் திருப்பூரில் நடந்த பிரதமர் நிகழ்ச்சியின் போது இது வெட்டவெளிச்சமாகி அசிங்கப்பட்டுவிட்டதாம். அப்படி என்ன நடந்தது திருப்பூர் விழாவில்?...

 

* மாநில தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் இருந்தும் கூட மேடையை முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டாராம் வானதி சீனிவாசன். இதனால் தமிழிசை சேரை விட்டு எழுந்திருக்காமல் அப்படியே கடுப்பேறி உட்கார்ந்துவிட்டாராம். 

* பிரதமர் வரும் நிகழ்வுக்கு, தமிழிசையின் படங்கள் போட்ட பிளக்ஸ்கள் ஒன்றிரண்டுதான் வைக்கப்பட்டு இருந்தனவாம். இதனால் அவர் சில நிர்வாகிகளை அழைத்து ‘என்னை அசிங்கப்படுத்திடீங்க இல்லையா?’ என்று காய்ச்சி விட்டாராம். 

* கட்சியின் கீழ் நிலை நிர்வாகிகள் பேசுவதற்கு முன்பாகவே முக்கிய தலைக்கட்டான சி.பி.ராதாகிருஷ்ணனை பேசவைத்ததில் அவர் கடுப்பாகிவிட்டாராம். 

* மாநில பொருளாளரான எஸ்.ஆர்.சேகரை மேடையில் வந்தேமாதரம் பாட மட்டும் அனுமதித்து உட்கார சொல்லிவிட்டாராம். 

* அதிரடியாய் பேசி கூட்டத்தை ஈர்க்கும் திறனுடைய ஹெச்.ராஜாவை, மொழிபெயர்ப்பாளராக மட்டுமே பயனபடுத்தினார்களாம். 

* த.மா.கா.விலிருந்து தாவிய கார்வேந்தனெல்லாம் மேடையில் பந்தா காட்டி, தனி லாபி செய்தாராம். 

* இளைஞரணியின் தேசிய நிர்வாகி முருகானந்தம் யாருக்கும் கட்டுப்படாமல் தனி நபராக ஸ்டேஜில் சுற்றிக் கொண்டு இருந்திருக்கிறார். 
இப்படியாகத்தான் முடிந்திருக்கிறது பிரதமரின் கூட்டம். 

திருப்பூர் மேடையில் இப்படி நடந்த கோஷ்டி கூத்துகள் அமித்ஷாவின் காதுகளுக்கு போட்டோவாகவே போய்விட்டனவாம். அவர் ஏக அப்செட்.
இதற்கிடையில், பிரதமர் மேடையில் முக்கியத்துவம் தரப்படாததற்கு எரிச்சலாகி ஒவ்வொரு நிர்வாகியும் ஒருவர் மீது இன்னொருவர் என்று மாற்றி மாற்றி பாய்ந்து பிடுங்கி போனிலும், தங்கள் ஆதரவாளர்களிடம் குறைகூறியும் சண்டை போட்டு வருகிறார்களாம். 

இது ஆதரவாளர்களுக்கு இடையே பெரும் பகையை மூட்டியுள்ளதால் அடுத்து நடைபெறும் நிகழ்வுகளில் உரசல்கள் அதிகமாகி, கைகலப்பு, வேட்டி கிழிப்பு என்று போய் முடிந்தாலும் ஆச்சரியமில்லை எனும் லெவலில் சென்று நிற்கிறதாம். தமிழகம் வரும் அமித்ஷா இந்தப் பிரச்னையை சீரியஸாக எடுத்து விசாரணை நடத்தி, ஒருங்கிணைப்பு ஏற்படுத்தவில்லை என்றால் தாமரை மலர்வதை தமிழக பி.ஜே.பி.யே தடுத்துவிடும்! என்கிறார்கள்.

click me!