பிரதமர் மோடி போடுவதாகச் சொன்ன 15 லட்சத்தை ‘எடுத்துக்கொண்ட’ முதல் இந்தியர்...

Published : Feb 13, 2019, 03:48 PM IST
பிரதமர் மோடி போடுவதாகச் சொன்ன 15 லட்சத்தை ‘எடுத்துக்கொண்ட’ முதல் இந்தியர்...

சுருக்கம்

’ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் மோடி போடுவதாகச் சொன்ன 15 லட்சத்தை இப்படியும் எடுத்துக்கொள்ளலாமோ’ என்று தனது வங்கிக் கணக்கில் 15 லட்சத்தைப் பறிகொடுத்த பா.ஜ.க. எம்பியை நோக்கிக் கிண்டலடித்திருக்கிறார் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர்.


’ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் மோடி போடுவதாகச் சொன்ன 15 லட்சத்தை இப்படியும் எடுத்துக்கொள்ளலாமோ’ என்று தனது வங்கிக் கணக்கில் 15 லட்சத்தைப் பறிகொடுத்த பா.ஜ.க. எம்பியை நோக்கிக் கிண்டலடித்திருக்கிறார் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர்.

கர்நாடக மாநில பா.ஜனதா பெண் எம்.பி. ஷோபா காரன்ட்லஜி. இவர் தனது சம்பள பணம் வரும் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது அதில் ரூ.15 லட்சத்து 62 ஆயிரம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய இரண்டே மாதங்களில் பல பரிவர்த்தனை மூலம் அப்பணம் ஆட்டயப் போடப்பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த எம்.பி. கனக்கு வைத்திருந்த ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் இந்த வங்கிக்கிளை பாராளுமன்ற வளாகத்துக்குள்ளேயே இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வங்கி கணக்கில் பணம் எடுக்கும் போது எஸ்.எம்.எஸ். தகவல் எதுவும் எம்.பி.க்கு வரவில்லை. பின்னதான் மர்ம நபர்கள் அவரது வங்கி கணக்கை ஹேக் செய்து பணத்தை எடுத்து இருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து ஷோபா காரன்ட்லஜி கூறும்போது, “எனது வங்கி கணக்கில் இருந்து நான் பணம் எடுக்கும்போது ஒவ்வொரு முறையும் எஸ்.எம்.எஸ். தகவல் வரும். ஆனால் இவ்வளவு பெரிய தொகை எடுக்கப்படும்போது கூட எனக்கு எந்த எஸ்.எம்.எஸ். தகவலும் வரவில்லை” என்றார்.

இந்த மோசடி குறித்து வடக்கு அவென்யூ போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஷோபா காரன்ட்லஜி எம்.பி. வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட வழக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.பண பரிவர்த்தனை உள்நாட்டில் நடந்ததா? அல்லது வெளிநாட்டில் நடந்ததா? என்ற விவரத்தை வங்கியிடம் இருந்து கேட்டு இருக்கிறோம்” என்றார்.

இப்படி பணம் ஆட்டயப்போடப்பட்டுள்ளதால் ஒரு பா.ஜ.க எம்பி நொந்துபோயுள்ள நிலையில், அது குறித்து கொஞ்சமும் இரக்கப்படாமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தனது ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் அடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக சமூக நலத்துறை அமைச்சரான பிரியன் கார்கே,’ பிரதமர் மோடி தருவதாகச் சொன்ன 15 லட்சத்துக்காக காத்திருந்து காத்திருந்து டயர்டாகிவிட்ட யாரோ இப்படி செய்துவிட்டார்கள் போலும்’ என்று முரட்டு நக்கல் அடித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!