இன்னும் எத்தனை ஏழை எளிய உயிர்கள்? திமுகவுக்கு எந்தக் காலத்திலும் மன்னிப்பு கிடையாது - அண்ணாமலை

By Raghupati RFirst Published Dec 11, 2023, 8:28 PM IST
Highlights

இன்னும் ஒரு உயிர் பறி போனால்கூட திமுகவுக்கு எந்தக் காலத்திலும் மன்னிப்பு கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 5 ஆம்‌ தேதி, மழை வெள்ளம்‌ சூழ்ந்திருந்ததால்‌, பிரசவ அவசரத்திற்கு ஆம்புலன்ஸோ, மற்ற வாகனங்களோ கிடைக்காமல்‌, வடசென்னை கன்னிகாபுரம்‌ பகுதியைச்‌ சேர்ந்த மசூத்‌ - செளமியா தம்பதியினரின்‌ குழந்தை, மருத்துவமனைக்கு மீன்பாடி வண்டியில்‌ கொண்டு ல்லும்‌ வழியிலேயே இறந்த நிலையில்‌ பிறந்திருக்கிறது. 

இந்நிலையில்‌, குழுந்தையின்‌ தாய்‌ உயிரையாவது காப்பாற்ற, புளியந்தோப்பு அரசு மருத்துவமனைக்குக்‌ கொண்டு சென்ற போது, அரசு மருத்துவமனையின்‌ கதவுகளைத்‌ திறக்க மறுத்திருக்கிறார்கள்‌ என்று கூறப்படுகிறது. பின்னர்‌ தனியார்‌ மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு, தொப்புள்கொடி அறுக்கப்பட்டு, பின்னர்‌ கீழ்ப்பாக்கம்‌ மருத்துவமனைக்குக்‌ கொண்டு சென்றிருக்கிறார்கள்‌. 

Latest Videos

குறித்த நேரத்தில்‌ மருத்துவ உதவி கிடைக்காமல்‌, பச்சிளம்‌ குழந்தையின்‌ உயிர்‌ பறிபோனது மட்டுமல்லாமல்‌, தாயின்‌ உயிருக்கும்‌ ஆபத்து ஏற்படும்‌ விதமாக அரசு மருத்துவமனையில்‌ நடந்து கொண்டிருக்கிறார்கள்‌. மேலும்‌, கீழ்ப்பாக்கம்‌ அரசு மருத்துவமனையில்‌, குழந்தையின்‌ உடலைக்‌ கொடுக்க, பணம்‌ கேட்டதாகவும்‌ குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. உச்சகட்ட அவலமாக, குழந்தையின்‌ உடலை, துணியில்‌கூட சுற்றிக்‌ கொடுக்காமல்‌, சாதாரண அட்டைப்பெட்டியில்‌ வைத்துக்‌ கொடுத்திருக்கிறார்கள்‌.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தமிழக மருத்துவத்‌ துறை வரலாற்றில்‌ இந்த சம்பவம்‌ மிகப்பெரும்‌ கருப்புப்‌ புள்ளி. நமது நாட்டைப்‌ பொறுத்தவரை, மருத்துவத்‌ துறையின்‌ தலைநகரமாக விளங்கிய தமிழகம்‌, கடந்த சில ஆண்டுகளாகவே, சொல்லொணா அவல நிலைக்குச்‌ சசன்று கொண்டிருப்பதைப்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கிறோம்‌. கடந்த 2022 ஆண்டு நவம்பரில்‌, பெரியார் நகர்‌ அரசு மருத்துவமனையில்‌ தவறான சிகிச்சை காரணமாக, கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்தார்‌. 

கடந்த மார்ச்‌ மாதம்‌ வரை, 21 மாதங்களில்‌ 247 குழந்தைகள்‌ புதுக்கோட்டை அரசு மருத்துவமணையில்‌ மரணமடைந்துள்ள அதிர்ச்சி செய்தி கிடைத்தது.  கடந்த ஜுலை மாதம்‌, தஞ்சாவர்‌ மாவட்டத்தில்‌, அங்கன்வாடியில்‌ தடுப்பூசி போடப்பட்ட பத்து மாத பெண்‌ குழுந்தை மயக்கமடைந்து, உடனடி சிகிச்சை அளிக்காமல்‌ தஞ்சாவூர்‌ அரசு மருத்துவமனைக்குக்‌ கொண்டு செல்லப்பட்டு, உயிரிழந்த சம்பவம்‌ பெரும்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கடந்த ஆகஸ்ட்‌ மாதம்‌, எழும்பூர்‌ அரசு குழந்தைகள்‌ மருத்துவமனையில்‌ ஐந்து ஆண்டுகளாக தவறான சிகிச்சை காரணமாக, காவலர்‌ ஒருவரின்‌ 10 வயது பெண் குழந்தையின்‌ வலது கால்‌ பாதிப்படைந்ததால்‌, அவர் தன்னையும் குழந்தையையும் கருணை கொலை செய்யும்படி வேதனை தெரிவித்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..

click me!