சென்னை வந்த மோடி..! வரவேற்க வராத அண்ணாமலை.? காரணம் என்ன.? எங்கே சென்றார் மாநில தலைவர்.?

Published : Apr 08, 2023, 05:11 PM IST
சென்னை வந்த மோடி..! வரவேற்க வராத அண்ணாமலை.? காரணம் என்ன.? எங்கே சென்றார் மாநில தலைவர்.?

சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரதமரை வரவேற்க விமான நிலையத்திற்கும், சென்ட்ரல் ரயில் நிலைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது பாஜகவினரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மோடி

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர். இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் ரூ.1260 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.  அடுத்த நிகழ்வாக சென்னை - கோவை இடையான வந்தே பாரத் ரயில் சேவை தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் சேவை ஆகும். இந்த ரயில் தொடக்க நிகழ்வுகளில் ஆளுநர், முதலமைச்சர்,மத்திய அமைச்சர் எல் முருகன் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை கலந்து கொள்ளாதது பாஐகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை வந்தடைந்தார் மோடி..! முதலமைச்சரோடு சேர்ந்து பிரதமரை ஒன்றாக வரவேற்ற ஆளுநர் ரவி

அண்ணாமலை எங்கே.?

ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தங்கள் அன்புத் தலைவரைக் காண்பதற்காக, அதிலும், வேகமாக விரையும் பாரத பிரதமரின் வாகன வரிசையில், அவரைக் காணக்கிடைக்கும் நொடி நேர தரிசனத்திற்காக, சாலையின் இருமருங்கிலும், நின்று வரவேற்க காத்திருக்கும் கட்சித் தொண்டர்களின் அன்பிற்கும் எல்லையே இல்லை. தமிழக மக்கள் மீது தனிப்பட்ட அன்பும், மரியாதையும், பாசமும் கொண்டிருக்கும் பிரதமர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பல கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் தங்கள் தலைவரின் முகத்தை பார்க்க தொண்டர்கள் சென்னையில் திரண்ட நிலையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை எங்கே என கேள்வி எழுப்பப்பட்டது.

டெல்லியில் அண்ணாமலை

ஆனால் இது தொடர்பாக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கூறுகையில், கர்நாடக தேர்தல் தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யும் பணியானது முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே கர்நாடக மாநில தேர்தலுக்கான இணைப்பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருப்பதால் தேர்தல் தொடர்பான முக்கிய பணியில் இருப்பதால் அண்ணாமலை டெல்லியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் தமிழக நிகழ்வில் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லையென கூறப்படுகிறது. இருந்த போதும் நாட்டின் பிரதமர் தமிழகம் வரும் பொழுது பாஜக மாநில தலைவர் இல்லாதது பல்வேறு வதந்திகளை பரவுவதற்கு வாய்ப்பாக மாறியுள்ளது.

 இதையும் படியுங்கள்

சென்னை டூ கோவை வந்தே பாரத் ரயில் சேவை..! கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
விஜய் கூட்டணி..! ஒன்றிணைந்த அதிமுக..! மிஸ்ஸானால் அதோகதி..! இருதலைக் கொள்ளியாய் இபிஎஸ்..!