தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் பொன்முடி.. பேப்பரை நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்து ஆவேசம்..!

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். 


திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக நிர்வாகிகள் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடி படிவத்தை திமுக நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்தது தொடர்பான வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசிய போது, இப்போ பஸ்சில் எப்படி போறீங்க..இங்கிருந்து கோயம்பேடு போக வேண்டும் என்றாலும் இங்கிருந்து எங்கே போக வேண்டுமானாலும் எல்லாம் ஓசி பஸ்சில் போறீங்க' என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். அமைச்சரின் பொன்முடி பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர். 

Latest Videos

அதேபோல், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் அரசு பள்ளி கட்டிட திறப்பு விழாவின் போது கடுப்பான அமைச்சர் பொன்முடி  அப்படியே எனக்கு ஒட்டு போட்டு கிழி, கிழின்னு கிழிச்சிட்டீங்க, கேட்க வந்துட்டீங்க, உட்காருங்க. நான் எப்போ வந்தாலும் இந்த அருங்குறிக்கையில் இப்படி தான் கத்துவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்' என்று பேசியதும் வைரலானது. 

 

இந்நிலையில், தற்போது மற்றொரு சர்ச்சையில் அமைச்சர் பொன்முடி சிக்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழச்சி அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்தது. அதே நிகழ்ச்சியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திமுக நிர்வாகிகள் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களையே பூதத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்து படிவங்கை பூர்த்தி செய்து அமைச்சரிடம் வழங்கினர். இதனால், ஆத்திரமடைந்த பொன்முடி அந்த படிவத்தை தூக்கி அவர்களின் முகத்திலேயே எரிந்து ஆவேசமாக திட்டினார். பின்னர், புதிதாக மீண்டும் படிவங்கை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என கூறிவிட்டு சென்றார். 

click me!