Breaking தமிழக சட்டமன்ற தேர்தல்... வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு... தலைமை தேர்தல் ஆணையர் தகவல்..!

Published : Feb 11, 2021, 01:49 PM IST
Breaking தமிழக சட்டமன்ற தேர்தல்... வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு... தலைமை தேர்தல் ஆணையர் தகவல்..!

சுருக்கம்

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல் தெரிவித்துள்ளார்.   

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல் தெரிவித்துள்ளார். 

தேர்தல் முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று சென்னை வந்தார். அவருடன் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார், உமேஷ்சின்ஹா உள்ளிட்டோர் வந்திருந்தனர். சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள இவர்கள் நேற்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சி பிரதிநிதிகளை அழைத்து கருத்துகளை கேட்டு அறிந்தனர்.

இதனையடுத்து,  தலைமை தேர்தல் ஆணையர்  சுனில் அரோரா செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- 

* தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. 

* தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியோர்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். 

* 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பதில் அரசியல் கட்சிகள் இடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன. 

* ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. 

* வாக்குப்பதிவு முடிந்த 2 நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

* கொரோனா காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஒரு மணிநேரம் அதிகரிக்கப்படும். 

* சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக துணை ராணுவம் அனுப்பவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

* வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின் போது வீடியோ பதிவு செய்யப்படும். 

* மின்னணு இயந்திரம் வைக்கப்படும் அறையில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள்

* புதிய வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும்

* அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

* கொரோனா காரணமாக தமிழகத்தில் கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள்

* வாக்கு பதிவு மையங்கள் 68,000த்திலிருந்து 93,000 ஆக அதிகரிப்பு

* வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின், உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

*  இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

* பொதுத்தேர்வு, திருவிழா காலங்களில் தேர்தல் நடத்த வேண்டாம் என அரசியல் கட்சிகள் கோரிக்கை

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!