அதிரடியாக பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்த எம்எல்ஏ.. மாணவர்களை நலம் விசாரித்து நெகிழ்ச்சி..

By Ezhilarasan BabuFirst Published Feb 11, 2021, 1:41 PM IST
Highlights

கொரோனா எதிரொலியாக 10 மாத இடைவெளிக்குப்பின் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகூடங்களுக்கு சென்று மாணவர்களை சந்தித்து நாகை சட்டமன்ற உறுப்பினரும், மாஜக பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி வரவேற்று நலம் விசாரித்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகப்பட்டிணம் தொகுதியில் உள்ள திட்டச்சேரி பேரூராட்சியில் இயங்கும் அரசு மேல்நிலை பள்ளிக்கு இன்று காலை தமிமுன் அன்சாரி எம்ஏல்ஏ அவர்கள் திடிர் வருகை மேற்கொண்டார். அங்கு தலைமையாசிரியரை அழைத்துக் கொண்டு 9,10,11,12 வகுப்புகள் நடைப்பெறும் வகுப்பறைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். கொரானா தொற்றுக்கு பிறகு பள்ளிக் கூடங்கள், திறக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் வகுப்புகளுக்கு சென்று எல்லோரும் எப்படி இருக்கீங்க ? நலம்தானா ? என விசாரித்தார்.

கொரானா தொற்று இன்னும் முடிவடைந்துவிடவில்லை என்ற அவர், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிரிமி நாசினியை பயன்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து விளக்கினார். மொத்தம் 17 வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடம் உரையாடினார். 

பிறகு அங்கு பணியில் இருந்த  20 ஆசிரிய- ஆசிரியைகளை சந்தித்து வகுப்புகள் எடுக்கும் முறைமை குறித்து கேட்டறிந்தார். பிறகு பீச்வாலிபால் போட்டிக்காக இத்தாலி சென்று தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்கள் கிளிண்டன், விக்னேஷ், மற்றும் அங்கு ஓவியத்திற்கு கின்னஸ் சாதனை பெற்ற ஓவிய ஆசிரியர் குமரவேல் ஆகியோரை பாராட்டினார். கொரானா கால கட்டத்தில் அக்கறையோடு வந்து தங்களை உரையாடியதற்காகவும் மாணவர்களை நலம் விசாரித்த தற்காகவும் ஆசிரியர்களும், மாணவர்களும் நெகிழ்ச்சியுடன் அவருக்கு  நன்றி கூறினர்.  

click me!