மற்ற கட்சிகளின் கொடிகளை அகற்றுவதால் மட்டும் திமுகவின் கொடி பறந்துவிடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக உளவுத்துறையின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது. மக்களின் அச்ச உணர்வை போக்கும் வகையில் சட்டமூலங்கை சீர் செய்வது தமிழக அரசின் கடமை. ஆளுநர் மாளிகையான ராஜ் பவன் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்புறம் குறித்து விரிவான விசாரணையை தமிழக அரசு நடத்த வேண்டும்.
நீட் தேர்வில் ஏழை, எளிய மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் கணிசமாக மருத்துவ படிப்பில் வெற்றி பெற்ற சேர்ந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளிகள் தோறும் சென்று திமுக நடத்தும் கையெழுத்து வேட்டை மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பமடைய செய்துள்ளது. நீட் தேர் ரத்து செய்யப்பட வேண்டும் என்றால் அதனை திமுக சட்டபூர்வமாக கையில் எடுக்க வேண்டும்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அரசியல் நோக்கத்தில் மக்களை திசை திருப்ப திமுக பல விளையாட்டுகளை கையில் எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கொடி மரங்களை அகற்றி எரிவதால் மட்டும் திமுக கொடி பறந்து விடாது. மாநிலத்தின் ஆளுநருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.