விடாமல் அடுத்தடுத்து அரெஸ்ட்.. அமர்பிரசாத் ரெட்டிக்கு நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

By vinoth kumar  |  First Published Oct 27, 2023, 1:41 PM IST

வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின்போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நுங்கம்பாக்கம் போலீசாரும் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்துள்ளனர்.
 


நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வலதுகரமாக செயல்படக்கூடியவரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவருமான அமர்பிரசாத் ரெட்டி கொடி கம்பம் நடும் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அண்ணாமலை ரைட் அண்ட் டை விடாமல் சுத்துபோடும் போலீஸ்.. அமர்பிரசாத் ரெட்டி மீது குண்டர் சட்டம் பாய்கிறதா?

இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டியை மேலும் இரண்டு வழக்குகளில் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியதாக அமர் பிரசாத் ரெட்டி மீது புகார் எழுந்திருந்தது. அந்த புகாரின் பேரில் தற்போது சிறையில் உள்ள அமர் பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதேபோல, வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின்போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நுங்கம்பாக்கம் போலீசாரும் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

இந்நிலையில், நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட வழக்கில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 10ம் தேதி வரை  அதாவது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளார்.

click me!