மக்களவை தேர்தல் வரைக்குமாவது ஆளுநர் இங்கையே இருக்கட்டும்... மாற்ற வேண்டாம்..! மோடிக்கு கோரிக்கை வைத்த ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Oct 27, 2023, 12:47 PM IST

விரைவில் நடைபெறவுள்ள 5 மாநில தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலோடு மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ள வைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். 
 


திராவிடம் என்னால் என்ன.?

சென்னையில் நடைபெற்ற வழக்கறிஞர் புருஷோத்தமன் இல்ல திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு  மணமக்களை வாழ்த்தி பேசினார்  இந்த திருமணம் சீர்திருத்த மற்றும் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றுள்ளது. இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967க்கு முன் நடைபெறும் என்றால் அந்த திருமணங்கள் சட்டப்படி அங்கீகாரத்தை பெற்ற வில்லை. சட்டம் அதற்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை,அண்ணா முதல் முறையாக முதலமைச்சராக 1967 என் பொறுப்பேற்றவுடன் சீர்திருத்த  திருமணங்களை சட்டபூர்வமாக்கியதாக தெரிவித்தார். 

Latest Videos

undefined

மேம்பால வழக்கில் கருணாநிதி கைது

சென்னை மாநகராட்சிக்கு நான் மேயராக இந்த பொது 10 மேம்பாலங்கள் கட்டப்பட்டது. மேம்பாலங்களை மாநகராட்சி கட்டுவது கிடையாது.  அது பொது பணித்துறை ,மத்திய அரசின் வேலை,  ஆனால் இந்த மேம்பாலங்களை குறித்த காலத்திற்கு முன்பே கட்டிய பெருமை நம்மையே சேரும். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிமுக அந்த பாலப்பணிகளை பணிகளை கிடப்பில் போட்டது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து அந்த பாலங்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டது.

சென்னை மாநகரில் கட்டிய பாலங்களுக்கு ஒதுக்கிய மதிப்பீட்டை விட குறைத்து கட்டு மீதி பணத்தை திரும்ப கொடுக்கப்பட்டது. ஆனால் அடுத்து வந்து அதிமுக,  இந்த பாலத்தில் ஊழல் நடந்துள்ளது என கூறி ஜெயலலிதாவால் இரவோடு இரவாக கலைஞரை கைது செய்தார். அப்போது இந்த வழக்கை பொதுநல வழக்கு போட்டு போராடியவர் புருஷோத்தமன் 

புருடா விடுமா ஆளுநர் ரவி

பெரிய பெரிய பதவியில் உட்கார்ந்து கொண்டு, பதவி என்பதே வேஸ்ட், அதுவும் பங்களாவில் இருந்து கொண்டு திராவிடம் என்றால் என்ன என கேட்கிறார்கள், இன்று இங்கு நடந்திருக்கும் திருமணம் தான் திராவிடம். திராவிடம்னா என்ன என கேட்க வைத்திருக்கிறதே அது தான் திராவிடம், இரண்டு நாட்களாக புருடா விட்டு கொண்டிருக்கிறாங்க அதையெல்லாம் பார்த்து இருப்பீர்கள்,

புருடா விடுறாரு அவரு தொடர்ந்து இங்கையே இருக்கட்டும். அது இன்னொரு பிரச்சாரத்திற்கு வலுவாக சேர்ந்து கொண்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தயவு செய்து இங்கு இருக்கும் ஆளுநரை மட்டும் மாற்றி விடாதீர்கள். நாடாளுமன்ற தேர்தல் வரையாவது இருக்கட்டும். பல சவுகரியம் எங்களுக்கு உள்ளது. எதை வேண்டும் என்றால் அவர் பேசட்டும் மக்கள் கண்டு கொள்ளவில்லை. 

ஆளுநரை மாற்றி விட வேண்டாம்

தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றி வருகிறோம்.  கருத்து கணிப்பு வருகிற சூழ்நிலை பார்க்கிறோமோ எப்படி  சட்டமன்ற நாடாளுமன்ற வெற்றி பெற்றோமா அதைப்போல வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம், வட மாநிலங்களில் நடைபெறவுள்ள 5 மாநில தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். மோடி தலைமையிலான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.   மணமக்களுக்கு ஆலோசனை கூறவேண்டிய அவசியமில்லை எனவே உங்களுக்கு பிறக்கப்பொகிற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என வாழ்த்துகிறேன். 

இதையும் படியுங்கள்

திமுக கூட்டணி கட்சிகள் மீது பழி போடுவது தான் நோக்கம்! ஆளுநர் மாளிகை பாஜகவின் அரசியல் கூடாரமாக மாறிபோச்சு!வைகோ

click me!